Monday, March 25, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஇந்திய அஞ்சல் துறையில் வேலை...விண்ணப்பிக்க முந்துங்கள்...

    இந்திய அஞ்சல் துறையில் வேலை…விண்ணப்பிக்க முந்துங்கள்…

    இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சென்னை அஞ்சல் மோட்டார் சேவைக்கான Skilled Artisan பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்த அறிவிப்பின்படி, மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு மாத ஊதியமாக ரூ.19,900 முதல் 63,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    இப்பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய துறைகளில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், எம்.வி.மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிப்போர் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

    இதைத்தொடர்ந்து, இப்பணியிடங்களுக்கு வயது 1.7.2022 தேதியின்படி, 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மேலும், தொழிற்முறைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    அஞ்சல் துறையின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க https://www.indiapost.gov.in இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர 9.1.2023 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 

    மூத்த மேலாளர், 

    அஞ்சல் ஊர்தி சேவை, 

    எண்.37, 

    கிரீம்ஸ் சாலை, 

    சென்னை – 600 006

    மேலும் விவரங்கள் அறிய கீழ்காணும் லிங்கை க்ளிக் செய்யவும்.

    https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP08122022_MMS_Eng.pdf

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....