Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பத்திரிகையாளரை மிரட்டினார்களா ரஜினி ரசிகர்கள்; வைரலாகும் காணொளி..

    பத்திரிகையாளரை மிரட்டினார்களா ரஜினி ரசிகர்கள்; வைரலாகும் காணொளி..

    ரஜினிகாந்த் ரசிகர்கள் பத்திரிகையாளர் பிஸ்மியின் அலுவலகம் சென்று மிரட்டும் தொணியில் பேசியுள்ள காணொளி இணையதளத்தில் வெளியானது.

    தமிழ் யூடியூபர்ஸ்களில் சினிமா சார்ந்து பிரபலமானவர், பிஸ்மி. இவர் திரைப்பட விமர்சகர், பத்திரிகையாளர் என்றைலெலாம் அறியப்படுகிறார். இவர் அவ்வபோது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வார். 

    அந்த வகையில், சமீபத்தில் ஒரு சேனலுக்கு பிஸ்மி அளித்த நேர்காணலானது சர்ச்சைக்குள்ளானது. அந்த நேர்காணலில், “ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்தார். அவர் இப்போது முன்னாள் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். நடிகர் விஜய்தான் தற்போதைய சூப்பர் ஸ்டார்.” என கூறியிருந்தார். இவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. ரஜினிகாந்த் ரசிகர்கள் தங்களின் எதிர்ப்புகளை சமூகவலைதளத்தில் காண்பித்து வந்தனர். 

    இந்நிலையில்,  சில ரஜினிகாந்த் ரசிகர்கள் பிஸ்மியின் அலுவலகம் சென்று மிரட்டும் தொணியில் பேசியுள்ள காணொளி இணையதளத்தில் வெளியானது. இந்த காணொளி தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மேலும், ரஜினிகாந்த் ரசிகர்களுடைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய அஞ்சல் துறையில் வேலை…விண்ணப்பிக்க முந்துங்கள்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....