Monday, March 18, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புதமிழகத்தில் நிரப்பப்படவுள்ள கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் - வெளிவந்த அறிவிப்பு!

    தமிழகத்தில் நிரப்பப்படவுள்ள கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் – வெளிவந்த அறிவிப்பு!

    தமிழகத்தில் நிரப்பப்படவுள்ள 1895 கௌரவ விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. 

    தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்பான அறிக்கையை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 

    அந்த அறிக்கையின்படி, 1895 கௌரவ விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ளன. 

    இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கான ஊதியம் என்பது, தகுதி மற்றும் திறன் அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணியிடத்திற்கு சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை, முனைவர் பட்டம், நெட், செட், சிலட் தேர்வு உள்ளிட்ட ஏதாவதொரு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கௌரவ விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.100, இதரப் பிரிவினர் ரூ. 200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

    விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள், தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் முதுகலை, எம்.பில்., பிஎச்.டி பட்டம் மற்றும் முதுகலைப் பட்டத்தில் பெற்ற மதிப்பெண் சான்றிதழின் புகைப்பட நகல்களுடன் www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

    உயர்கல்வித் துறை அறிக்கையின்படி, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக 29.12.2022 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய https://www.tngasa.in/pdf/G.O.269,GL-11302022162958%20%281%29.pdf இணையதளத்தை அனுகவும். 

    விமானப் பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை மீண்டும் தொடக்கம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....