Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இன்று முக்கிய சந்திப்பு

    ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இன்று முக்கிய சந்திப்பு

    ஜி 20 மாநாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையே இன்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது. 

    இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் ஜீ 20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.  

    பிரதமர் மோடி இந்த ஜி 20 உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்றார். இந்நிலையில் முன்னதாக பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக்கை காலையில் சந்தித்து பேசினார். இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரதமர் மோடியும் நேரில் சந்தித்து பேசினர். 

    இந்தச் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்ததாகவும், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

    மேலும் இருதரப்பு இடையே கூட்டுறவை வலுவாக்குதல், குவாட் கூட்டமைப்பில் நெருங்கிய ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும், இரு நாட்டு தலைவர்களும், தற்போது வளர்ந்து வருகிற தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலம் சார்ந்த துறைகளில் மேம்படுத்த இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் ஆய்வு நடத்தியதாகவும் கூறியுள்ளார். 

    இரு நாட்டிடையே கூட்டாண்மையை வலுப்படுத்த, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தொடர்ச்சியான ஆதரவுக்கு, பிரதமர் மோடி நன்றி கூறியதாகவும், பிறகு இரு நட்டு தலைவர்களும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை சந்ததாகவும் அரிந்தம் பாக்சி தெரிவித்தார். 

    அடுத்த மாதம் ஜி 20 மாநாட்டின் பொறுப்பை இந்தியா ஏற்கவிருக்கும் நிலையில், ‘வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தப்படும்’ என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்கடென்னிஸ் ஜாம்பவான் நடாலை வீழ்த்திய இளம் வீரர்…நடாலின் தோல்விப்பயணம் தொடர்கிறதா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....