Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் ஏற்படுகிறது- தமிழிசை பேட்டி

    ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் ஏற்படுகிறது- தமிழிசை பேட்டி

    ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் ஏற்படுகிறது என துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டி.

    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி ராஜ் நிவாசில் நடைபெறும் மும்பை சத்திரபுஜ் நர்சீ பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 6 பேர் விடுதலை உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பதால் கருத்து சொல்ல முடியாது என்றும், ஆளுநர் தாமதம் தான் விடுதலைக்கு என்று கூறமுடியாது. ஆளுநர் முடிவெடுப்பதில் சில சவால்கள் இருந்திருக்கலாம். சிறையில் இருப்பவர்களை விடுவிக்கும் போது பல மாநிலங்களில் முன் உதாரணமாக இருந்து விடக்கூடாது என்று ஆளுநர் அதை சவாலாக நினைத்து இருக்கலாம், ஆளுநருக்கு முடிவெடுப்பதில் சில காரணங்கள் இருந்து இருக்கலாம் எனவே நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றார்.

    ஆளுநர்களை பற்றி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார்கள். இப்போது கவனம் ஆளுநர் பக்கம் திரும்பியுள்ளது எல்லா ஆளுநர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு, சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் நடக்கின்றோம். இதில் விதிமீறல்கள் இல்லை.

    ஆனால் சின்ன சின்ன நடவடிக்கைகள் கூட விமர்சனம் செய்வது என்று சில அரசியல் வாதிகள் கிளம்பியிருக்கின்றார்கள். அதில் சீத்தாராம் யெச்சூரியும் ஒருத்தர். எல்லா ஆளுநர்களும் மக்களுக்கு நல்லது செய்ய தான் அரசியல் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் உள்ளோம். ஆனால் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் ஏற்படுகிறது என தமிழிசை தெரிவித்தார்.

    இதையும் படிங்கமுருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் நால்வரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது: இயக்குனர் கெளதமன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....