Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கொரோனாவின் கோரத்தாண்டவம்..சீனாவின் பொருளாதாரத்தை மிரட்டும் மக்கள் தொகை குறைப்பு!

    கொரோனாவின் கோரத்தாண்டவம்..சீனாவின் பொருளாதாரத்தை மிரட்டும் மக்கள் தொகை குறைப்பு!

    உலக மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனாவில், தற்போது மக்கள் தொகை குறைந்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த போது, குழந்தைகளை பெற்றுக் கொள்ள பெண்கள் அதிகளவில் விருப்பம் காட்டவில்லை என்பதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக சீனாவில் மக்கள் தொகை 660 மில்லியனிலிருந்து 1.4 பில்லியன் வரை அதிகரித்தது. சீனாவின் தேசிய புள்ளிவிவர பணியகத்தின் தகவலின் அடிப்படையில், சீனாவின் மக்கள்தொகை 2021ஆம் ஆண்டில் வெறும் 1.41212லிருந்து 1.41260 வரையே வளர்ச்சி அடைந்துள்ளது.

    ‌1980-களின் பிற்பகுதியில் சீனாவின் மொத்த கருவுறுதல் விகிதமானது, 2.6 ஆக இருந்தது. அதன்பிறகு, 1994 ஆம் ஆண்டிலிருந்து 1.6 – 1.7 க்கு இடையில் இருந்தது. 2020ஆம் ஆண்டு 1.3 ஆக இருந்து, அதுவே 2021ஆம் ஆண்டில் 1.15 ஆக குறைந்தது. கருவுறுதல் விகிதமானது ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் 1.6 ஆக உள்ளது. இதுவே ஜப்பானில் 1.3 ஆக உள்ளது.

    கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு குழந்தை திட்டத்தை ஒழித்த சீனா, கடந்த ஆண்டு வரிச் சலுகைகளுடன் கூடிய மூன்று குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இந்த நிலை தொடர்கிறது. அரசு பல திட்டங்களை வழங்கியும், சீன பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயங்குவதற்கு பல காரணங்கள் உள்ளது. சீன மக்கள் அனைவரும் சிறிய குடும்பங்களுக்கு பழகியிருக்கலாம். விலைவாசி உயர்வு, திருமண வயது அதிகரித்திருப்பது போன்ற காரணங்களால் தான் குழந்தை பெறும் விகிதம் சீனாவில் குறைந்துள்ளது.

    இதையெல்லாம் தாண்டி, சீனாவில் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் வயதில் குறைந்த அளவிலான பெண்களே உள்ளனர். இதனால் 106 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள் என்ற நிலையிலேயே சீனா உள்ளது. சீனாவின் மக்கள்தொகை வெகு விரைவாக குறையும் நிலையை எட்டியுள்ளது.

    த ஷாங்காய் அகாடமி ஆஃப் சோஷியல் சயின்ஸஸ்

    2021ஆம் ஆண்டுக்கு பின், சீனாவில் வருடந்தோறும் 1.1 சதவீத அளவில் மக்கள் தொகை குறையும் என்று ‘த ஷாங்காய் அகாடமி ஆஃப் சோஷியல் சயின்ஸஸ்’ கணித்தது. இப்படியே சென்றால், 2100-ல் 587 மில்லியனாக இருக்கும். இது இப்போது இருக்கும் மக்கள்தொகையை காட்டிலும் பாதியளவே ஆகும். குழந்தை பிறப்பில் ஏற்படும் வீழ்ச்சியானது, சீனாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    அதேபோல, சீனாவின் உழைக்கும் மக்கள்தொகை 2014ஆம் ஆண்டு உச்சத்தை அடைந்தது. ஆனால், இதுவே 2100ஆம் ஆண்டு மூன்றில் ஒரு பங்காக அது குறையும் என்று கணிக்கப்படுகிறது. சீனாவின் உழைக்கும் இஞைர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றால், அது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவே எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் உற்பத்தி திறன் அதிகம் இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம்.

    வளங்கள் பல நிறைந்த ஆஸ்திரேலியா போன்ற ஏற்றுமதி நாடுகள், சீனாவில் ஏற்படும் இந்த மக்கள் தொகை மாற்றத்தால் பிற ஏற்றுமதி சந்தையை நாட நேரிடலாம். அதேபோல, அமெரிக்கா போன்ற இறக்குமதி நாடுகள், புதிய மற்றும் வளரும் உற்பத்தி மையங்களை நோக்கி படையெடுக்க வாய்ப்புள்ளது.

    இருப்பினும் இந்த மக்கள் தொகை குறித்த தகவல்கள் ஒருபுறம் இருக்க, இந்த மக்கள்தொகை கணிப்புகள் அண்டை நாடான இந்தியாவிற்கும் செல்லலாம். அடுத்த சில வருடங்களில் இந்தியா, மக்கள் தொகையில் சீனாவை முந்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    சேலத்தில் பழங்கால கல்வட்டங்கள்: ஆய்வு செய்த தொல்லியல் துறையினர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....