Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இந்தியா பொது மன்னிப்பு கேட்க தேவையில்லை - கேரள கவர்னர் பேச்சு

    இந்தியா பொது மன்னிப்பு கேட்க தேவையில்லை – கேரள கவர்னர் பேச்சு

    முஸ்லிம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பா.ஜ., நிர்வாகிகள் பேசிய விவகாரத்தில், கத்தார் கூறியபடி, இந்தியா பொது மன்னிப்பு கேட்க தேவையில்லை என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். கேரள மாநில ஆளுநராக ஆரீப் முகமது கான் செயல்பட்டு வருகிறார்.

    இது தொடர்பாக டில்லியில் நிருபர்களிடம் ஆரிப் முகமது கான் கூறியதாவது:

    கடந்த காலங்களில் காஷ்மீர் விவகாரத்தில், பல நாடுகள் இந்தியாவிற்கு எதிராக பேசியுள்ளன. தங்களது கருத்தை தெரிவிக்க மக்களுக்கு உரிமை உள்ளது. அது எப்படி பிரச்னையாகும்? பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது முக்கியம் அல்ல. மன்னிப்பு கேட்க தேவையில்லை சிறிய எதிர்வினைகள் குறித்து இந்தியா கவலைப்பட தேவையில்லை. தனது பாரம்பரியத்தை பாதுகாப்பதில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்.

    அனைத்து மரபுகளுக்கும் மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்வது நமது பாரம்பரியத்தில் உள்ளது. உண்மையில், அனைத்து மரபுகளையும் ஏற்று கொள்கிறோம். மரியாதை கொடுக்கிறோம் என்பது உண்மை. யாரையும் மற்றவர்களாக கருதுவது இந்தியாவின் கலாசாரம் இல்லை. அனைவரையும் உள்ளடக்கிய நமது கலாசாரத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நமது பிரதமர் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் ஆகியோரின் கருத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    யாரும் விடுபடக்கூடாது. அது தான் நமது கலாசார பாரம்பரியம். அதனை நாம் பலப்படுத்த வேண்டும். டிவியில் அனல் பறக்கும் விவாதத்தில் நுபுர் ஷர்மாவும் நவீன் குமார் ஜிண்டாலும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளனர். அதற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை. இவ்வாறு ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.

    இதே போன்று கடந்த மாதம் இந்தியாவில் முறையான கல்வியை பரப்பி பழைய கலாச்சாரம் மற்றும் ‘சனாதன தர்ம’ கொள்கைகளை மீட்டெடுக்க வேண்டும் என ஆரிப் முகமது கான் கூறினார்.

    அப்போது அவர் பேசுகையில் “நாட்டில் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்க அனைவரும் பாடுபட வேண்டும். நாம் அங்கு திரும்பி செல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. இந்தியாவில் ‘சனாதன’ கொள்கைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான். இதை செய்வது என்பது கல்வி இல்லாமல் சாத்தியமில்லை. இதனால் முறையான கல்வியை வழங்க வேண்டும். மேலும், மனித வாழ்வின் நோக்கம் என்பது அறிவை தேடுவது தான் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். இதனால் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். மேலும் பணிவு என்பது அறிவை பொறுத்ததாகவே இருக்கும். இதனால் பணிவு குணம் கொண்டவர்களை இழிவாக பார்க்க முடியாது” என்று கூறினார்.

    குறி வச்சு அடிக்கும் ஏவுகணை; உக்ரைனுக்கு பரிசளித்த இங்கிலாந்து! – அடுத்த கட்டம் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....