Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கடிதம், கார்.. லோகேஷிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உலகநாயகன்..!!

    கடிதம், கார்.. லோகேஷிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உலகநாயகன்..!!

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், அனிருத் இசையில், கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    சிறப்பான திரைக்கதைக்காகவும், கமல், பகத், விஜய் சேதுபதி ஆகியோரின் பிரமாதமான நடிப்பிற்காகவும், அனிருத்தின் மிரட்டலான இசைக்காகவும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்று வருகிறது.

    அதிலும், நான்கு வருடங்கள் கழித்து கமல் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் என்பதால், திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதுவரைப் பார்க்காத தோற்றத்தில் நடித்துள்ள கமல் எப்பொழும் போல தனது பிரத்தியேக நடிப்பின் மூலம் மீண்டும் ஒரு முறை தமிழ்த் திரையுலகினை கட்டிபோட்டுள்ளார். 

    இந்த வருடத்தில் வெளிவந்த பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவு பாதிப்பினை ஏற்படுத்தாத நிலையில், விக்ரம் திரைப்படமானது வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த திரைப்படத்தினை இயக்கியதற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு வாழ்த்து கூறி நேற்று ஒரு கடிதத்தினை கமல்ஹாசன் அனுப்பியிருந்தார். இந்த கடிதத்தினை சமூக வலைதளத்தில் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், இது ஒரு ‘லைஃப் டைம் செட்டில்மென்ட் லெட்டர்’ என்று நெகிழ்ந்து போய்க் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், இன்று லோகேஷ் கனகராஜிற்கு உயர்ரக லெக்சஸ் கார் ஒன்றினைப் பரிசாக வழங்கியுள்ளார். மேலும், விக்ரம் திரைப்படத்தில் தன்னுடன் சேர்ந்து பணியாற்றிய 13 கலைஞர்களுக்கு அப்பாச்சி பைக்கினைப் பரிசளித்து அசத்தியுள்ளார்.

    விக்ரம் திரைப்படமானது இதுவரை வெளிவந்த கமல் திரைப்படங்களிலேயே ஒரு பிரமாண்ட வசூல் சாதனையினை நிகழ்த்தியுள்ளது. திரைப்படம் எடுக்க ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் ஒரு பரபரப்பினை ஏற்படுத்தியிருந்த திரைப்படம் விக்ரம்.

    திரைப்பட விளம்பரத்திற்காக பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டிருந்த திரைப்படக்குழு, துபாயில் உள்ள உலகின் உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் விளம்பரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    பேருந்துகளில் சத்தமாக போன் பேசக் கூடாதாம்: விரைவில் வரவிருக்கும் தடை உத்தரவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....