Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்தனது சொந்த மொழியினை உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு??

    தனது சொந்த மொழியினை உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு??

    சமீபத்தில் டால்-ஈ2 (DALLE-E2) எனப்படும் செயற்கை நுண்ணறிவு அமைப்பு ஒன்று தனக்கு மட்டுமே புரியக்கூடிய வகையில் ஒரு மொழி அகராதியினைத் தயாரித்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    டால்-ஈ2 என்கிற செயற்கை நுண்ணறிவு அமைப்பானது பயனாளர்கள் கொடுக்கப்படும் வார்த்தைகளை உபயோகப்படுத்தி அவர்களுக்குத் தேவையான புகைப்படத்தினை வழங்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

    இந்த டால்-ஈ2 என்ற நுண்ணறிவு அமைப்பினை உருவாக்குவதற்கு ஓப்பன் ஏஐ என்கிற நிறுவனமானது இரண்டு வருடங்களுக்கு மேலாக உழைத்து வருகிறது. பிரபல அனிமேஷன் திரைப்படமான வால்-ஈ திரைப்படத்தில் வரும் ரோபோவின் நியாபகமாக இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பிற்கு டால்-ஈ2 என்று பெயரிடப்பட்டுள்ளது.

    பயனாளர்கள் கொடுக்கும் வார்த்தைகளுக்குத் தகுந்த புகைப்படத்தினைக் கொடுப்பதற்காக இந்த டால்-ஈ2-விற்கு பல ஆயிரக்கணக்கான புகைப்படங்களின் மாதிரிகளை வைத்து பரிசோதனை செய்துள்ளனர். இவ்வாறு பரிசோதனைக்கு கொடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு தனக்கு மட்டுமே புரியும் வகையில் ஓரு சொல் அகராதியினை டால்-ஈ2 உருவாக்கி வந்துள்ளது.

    டால்-ஈ2 உருவாக்கியுள்ள இந்த சொல் அகராதியில் இருக்கும் எந்த ஒரு வார்த்தைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு அர்த்தம் புரியவில்லை என்பது தான் இங்கு ஆச்சர்யமான விடயமாய்ப் பார்க்கப்படுகிறது. 

    டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில், கணினி அறிவியல் பிரிவில் முனைவர் பட்டத்திற்கு படித்து வரும் கியானிஸ் டாரஸ் என்பவர் டால்-ஈ2 கண்டறிந்துள்ள இந்த வார்த்தைகளை பொதுமக்களுடன் பகிர்ந்துள்ளார். 

    காய்கறிகளைப் பற்றி விவசாயிகள் பேசிக்கொள்வது போன்ற புகைப்படங்களை டால்-ஈ2-விடம் அவர் கேட்டிருந்தார். அவர் கேட்டதற்கு ஏற்ற மாதிரியான புகைப்படங்களை எடுத்துக் கொடுத்த அந்த நுண்ணறிவு அமைப்பு, விகுடஸ் (vicootes) என்கிற வார்த்தையினை கசியவிட்டுள்ளது. 

    இந்த விகுடஸ் என்கிற வார்த்தையானது டால்-ஈ2 உருவாக்கிய ஒன்று என்று அவர் கூறியுள்ளார். இந்த வார்த்தை மட்டுமின்றி பல புதிய வார்த்தைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

    நுண்ணறிவு மொழியில் பறவைகளுக்கு apoploe vesrreaitars என்று பெயரிடப்பட்டுள்ளது. டால்-ஈ2 உருவாக்கியுள்ள இந்த வார்த்தைகள் தொகுப்பினை மொத்தமாகக் கண்டறிந்து ‘மறைக்கப்பட்ட அகராதி’ என்ற பெயரில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையினை டாரஸ் வெளியிட்டுள்ளார்.

    இதன் படி, பயனர்கள் கேட்கும் ஒவ்வொரு படங்களுக்கும் டால்-ஈ2வானது தனக்கு மட்டுமே புரியும் வகையில் ஒரு சங்கேத மொழியினை உருவாக்கி வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவிற்காகவென்று ஒரு சாதனம் உருவாக்கப்பட்டால், வரும்காலத்தில் ஒரு முழுவதுமான செயற்கை நுண்ணறிவு மொழி உருவாக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    திரைப்படங்களில் மட்டுமே கேள்விப்பட்டுள்ள இம்மாதிரியான விடயங்கள் தற்போது நிஜ வாழ்க்கையில் நாம் வாழும் நாட்களில் நடைபெறுவது சகஜமாகிக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    சேலத்தில் பழங்கால கல்வட்டங்கள்: ஆய்வு செய்த தொல்லியல் துறையினர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....