Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சொகுசு கப்பல் புதுச்சேரிக்குள் நுழையுமா? - தமிழிசை சவுந்தராஜன்!

    சொகுசு கப்பல் புதுச்சேரிக்குள் நுழையுமா? – தமிழிசை சவுந்தராஜன்!

    புதுச்சேரி என்.சி.சி., தலைமையகம் சார்பில் நடைபெறும் பாய்மரப் படகு சாகசப் பயண துவக்க விழா, நேற்று புதுச்சேரி, தேங்காய்திட்டு துறைமுகத்தில் நடந்தது. பாஸ்கர் எம்.எல்.ஏ., மற்றும் என்.சி.சி., அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கவர்னர் தமிழிசை, மாணவர்களின் கடல் சாகச பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    கடல் சாகசப் பயணத்தில் மாணவிகள் பங்கேற்பது மிகவும் சவாலானது. இப்பயணம் அவர்களுக்கு ஊக்கம், தன்னம்பிக்கையை அளிக்கும். பிளாஸ்டிக் பூமிக்கு மிகவும் பாரமாக உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் சூழலில், பிளாஸ்டிக் இல்லாத உலகமே வருங்கால சந்ததியினருக்கு நாம் அளிக்கும் ஆரோக்கியமான பரிசாக இருக்கும். இதுதொடர்பாக என்.சி.சி., மாணவர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விழாவிற்கு வரும்போது, முகத்துவாரத்தை துார் வாரவில்லை என மீனவர்கள் கூறினர். இதுகுறித்து முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் அம்மையார் கோவில் விழாவிற்கு செல்ல உள்ளேன்.

    அப்போது, அரசு மருத்துவமனை மற்றும் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளேன். காரைக்கால் எவ்வகையிலும் புறக்கணிக்கப்படாது. மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. புதிய வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை. தொற்று பரவல் அதிகரித்தால், தேவையான படுக்கை, ஆக்சிஜன் வசதிகள் உள்ளது. கொரோனாவை தடுப்பதில் எச்சரிக்கையாக உள்ளோம்.

    தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சொகுசு கப்பலுக்கு, புதுச்சேரி அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை. அது தொடர்பான எந்த கோப்பும் எனக்கு வரவில்லை. சொகுசு கப்பல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்துவது அரசின் எண்ணம். அதே நேரத்தில் வருமானத்திற்காக, கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலான சுற்றுலாவிற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என அவர் கூறினார்.

    உல்லாச பயணம் என்ற போர்வையில் இயக்கப்படும் சொகுசுகப்பலில் மக்களின் உழைப்பை உறிஞ்ச பல்வேறு கேசினோ சூதாட்டங்கள் தான் பிரதானமாக இடம்பெற்றுள்ளன. புதுச்சேரிக்குள் கேசினோ சொகுசு கப்பலை நுழைய அனுமதிக்கக் கூடாது என அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தனது சொந்த மொழியினை உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு??

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....