Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமன்னிப்பு கேட்குமா பாஜக அரசு??

    மன்னிப்பு கேட்குமா பாஜக அரசு??

    பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திக்கு அளித்திருந்த பேட்டி ஒன்றில் கூறியிருந்த கருத்து தற்போது பல நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    கியான்வாபி தொடர்பான விவாதத்தில் பங்கேற்றிருந்த நுபுர் ஷர்மா, விவாதத்தின் நடுவில் முஹமது நபி தொடர்பாக சர்ச்சையான விதத்தில் கூறியிருந்த கருத்து தற்போது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

    இந்த கருத்திற்காக அரேபிய நாடுகள் பலவும் இந்தியா மீது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்த கருத்தினைக் கூறிய நுபுர் ஷர்மா மற்றும் நவீன் குமார் ஜிலால் ஆகியோர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், இவர்களின் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு இந்திய அளவில் பல்வேறு கண்டனங்களும், அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.

    பிரச்சனையின் சாராம்சம்..

    கடந்த வெள்ளிக்கிழமை நுபுர் ஷர்மா கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் மாகாணத்தில் இருந்த சந்தை ஒன்றில் முழு கடையடைப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த கடையடைப்போனது பாதியளவே பின்பற்றப்பட்டது.

    கடையடைப்பு அன்று தங்களது தொழுகையினை முடித்துவிட்டு வந்த முஸ்லிம்கள், திறந்திருந்த கடைகளை மூடும்படி வற்புறுத்தியுள்ளனர்.

    ஆனால் கடை உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை கலவரமாக மாறியது.

    சுமார் 1000 பேர் கொண்ட குழுவினர் கற்களை கொண்டு தாக்கத் தொடங்கினர்.இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக எதிர்தரப்பில் உள்ளவர்களும் கற்களைக் கொண்டு தாக்கத் தொடங்கவே, அந்த பகுதி கலவரத்தால் சூழப்பட்டது.

    தகவலறிந்து அந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர், பலமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு கலவரத்தினைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த கலவரம் தொடர்பாக 1000 பேருக்கு மேல் வழக்கு பதிவு செய்துள்ளது. கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    கான்பூரில் நடந்த இந்த கலவரத்திற்குப் பிறகு, பாஜக கட்சியானது தங்களது செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மாவினை பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது.

    இந்திய அளவில் ஆதரவும், கண்டனங்களும்..,

    இந்த பிரச்சனைக்குப் பிறகு பதில் கூறிய நுபுர் ஷர்மா, ‘ஹிந்து மதத்தின் மீது பல முறை தொடுக்கப்பட்ட வன்முறை கருத்துகளை எதிர்த்து மட்டுமே அவ்வாறு கூறியிருந்தேன்.’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், ‘எனக்கு மற்ற மதத்தினரைப் புண்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் இல்லை. என்னுடைய கருத்து மற்ற மதத்தினரைப் புண்படுத்தி இருந்தால், எனது கருத்தினை நான்திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.’ எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    நுபுர் சர்மாவின் இந்த சர்ச்சைக் கருத்துக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ‘இந்தியாவானது இந்திய அளவில் அதிகமாக வேற்றுமைப்படுத்தப்பட்டுள்ளது, உலக அளவில் பலவீனமாகியுள்ளது. பாஜகவின் இந்த இழிவான செயலால் நாம் தனித்து விடப்பட்டது மட்டுமில்லாமல், உலக அரங்கில் இந்தியாவின் நிலை சேதமடைந்துள்ளது.’ என்று கூறியுள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சி தலைவர் மனிஷ் சிசோதியா, ‘பாஜகவின் இந்த செயலால் சிறிய நாடுகளும் நம்மைப் பார்த்து கேள்வி கேட்கும் நிலை வந்துள்ளது.’ என்று கூறியுள்ளார்.

    ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளர் செய்த குற்றத்திற்காக ஒட்டுமொத்த நாடும் ஏன் உலக அளவில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,

    தவறு செய்தது ஒரு கட்சியே அன்றி நாடும் நாட்டு மக்களும் அல்ல எனவே தவறு செய்த அந்த கட்சிதான் மன்னிப்பு கேட்கவேண்டும் அன்றி நாடும் நாடு மக்களும் அல்ல போன்ற கருத்துக்களும் மக்களிடமிருந்தும், கட்சித் தலைவர்களிடமிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன.

    உலக அளவில் வலுக்கும் கண்டனங்கள்..

    பாக்கிஸ்தான்:

    பாக்கிஸ்தான் நாட்டின் டெய்லி த்ரிபுணே என்கிற செய்திதாள் நிறுவனமானது, இந்தியாவானது பல நாடுகளால் குறிவைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

    சிறுபான்மை மதத்தினைரைப் பற்றிக் கூறிய கருத்துக்கு எந்த விதமான எதிர்ப்பு நடவடிக்கையினையும் பாஜக அரசு எடுக்காமல் இருப்பது இந்தியாவின் மனித உரிமைக்குப் பாதுகாப்பானது அல்ல என்றும் அந்த செய்தித் தாள் குறிப்பிட்டுள்ளது.

    ஐக்கிய அரபு நாடுகள்:

    ‘முகமது நபி குறித்து சர்ச்சையான விதத்தில் பதிலளித்த நுபுர் ஷர்மாவினை பாஜக அரசு பதவி விலக்கியுள்ளது.’

    ‘அவரது கருத்துக்கு பல பகுதிகளிலிருந்தும் கண்டங்கள் வலுத்து வருகின்றன.’ என்று அங்கு விற்பனையாகும் கலீஜ் டைம்ஸ் என்னும் செய்தித் தாள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    துருக்கி:

    டிஆர்டி வேர்ல்ட் என்கிற துருக்கி செய்தித்தாள் நிறுவனமனது, ‘மோடி பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் இஸ்லாமியர்களுக்கு எதிராக பல வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. லவ் ஜிகாத் என்கிற பெயரில் முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். வர்கள் கொரோனா நோயினை பரப்புவதாகவும் கூறப்படுகின்றனர்.’ என்று குறிப்பிட்டுள்ளது.

    மேலும், ‘அரபு நாடுகளுடன் சேர்ந்து பல நாடுகளும் பாஜகவின் இந்த பேச்சிற்கு தங்களது கண்டனத்தினையும், இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரியும் கூறி வருகின்றன.’ என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    கத்தார்

    காத்தார் நாட்டின் அல்ஜரீரா என்னும் செய்து நிறுவனமானது, ‘பிரான்ஸ் மற்றும் சீனாவினைத் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியுள்ளது.’

    ‘இந்தியாவிற்கு எதிராக அரபு நாடுகள் கடும் கண்டனத்தினைத் தெரிவித்து வருகின்றது. இந்திய பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.’ என்று கூறியுள்ளது.

    இந்த செய்தி நிறுவனமானது கான்பூரில் நடந்த கலவரத்தினைப் பற்றியும் நுபுர் ஷர்மாவினை கைது செய்யக்கோரியும் கருத்துகளைக் கூறிவருகிறது.

    குவைத்:

    குவைத்தில் வெளிவரும் அராப டைம்ஸ் என்னும் செய்தித்தாளானது நுபுர் ஷர்மாவிற்கு எதிராக பாஜக எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்று எழுதியுள்ளது. இருப்பினும் இந்தியத் தரப்பிலிருந்து ஒரு பகிரங்கமான மன்னிப்பினை எதிர்பார்ப்பதாகவும் அந்த செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    உலக அளவிலும், இந்தியாவிற்குள்ளும் பாஜகவிற்கு எதிராகவும், நுபுர் ஷர்மாவிற்கு எதிராகவும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. நுபுர் ஷர்மா கூறிய ஒற்றைக்கருத்து இன்று உலக அளவில் இந்தியாவினை பேசு பொருளாக மாற்றியுள்ளது.

    பல நாடுகளும் இந்தியத் தரப்பிலிருந்து மன்னிப்பினை எதிர்பார்க்கின்றன. ஒரு கட்சியின் உறுப்பினர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த நாட்டு தரப்பிலும் மன்னிப்புக் கேட்க வேண்டுமா..

    அல்லது ஒரு கட்சியாக பாஜக, உலக நாடுகளிடம் மன்னிப்பினைக் கோருமா என்ற கேள்வி தற்போது அனைவரது மனதிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.

    மோசடி செய்த வருங்கால கணவரை அதிரடி கைது செய்த பெண் போலீஸ் தற்போது கைது – உண்மையில் என்னதான் நடந்தது?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....