Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்பேரணிக்கு செக் வைத்த காவல்துறை..! அனுமதி கிடைக்குமா? கிடைக்காதா? குழப்பத்தில் ஆர்.எஸ்.எஸ்

    பேரணிக்கு செக் வைத்த காவல்துறை..! அனுமதி கிடைக்குமா? கிடைக்காதா? குழப்பத்தில் ஆர்.எஸ்.எஸ்

    ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காத 47 இடங்களில் உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்த பிறகே உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு மாநில உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    மனுவை விசாரித்த உயநீதிமன்றம் தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணிகளை நடத்திக்கொள்ள, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி அளித்ததோடு, தமிழக காவல்துறையிடமும் முறையான அனுமதி பெற்று பேரணியை நடத்த உத்தரவிட்டிருந்தது.

    இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் உயநீதிமன்றத்தை நாடி நவம்பர் 6-ல் பேரணியை நடத்த அனுமதி பெற்றது.இதனையடுத்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு பேரணி நடத்த அனுமதி வழங்குமாறு மாவட்ட எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

    இதையும் படிங்க: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இந்தியா! உலக நாடுகளை கதிகலங்க வைத்த ரிப்போர்ட்

    இதனை தொடர்ந்து உளவுத்துறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டும் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்தது.இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீண்டும் தமிழக காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கானது இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது ஆர்.எஸ்.எஸ் தரப்பில் உளவுத்துறை அறிக்கையை காரணம் காட்டி அரசு தப்பிக்க முயல்வதாகவும், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி மற்ற இடங்களில் அனுமதி அளிக்காததற்கான காரணத்தை காவல்துறையிடம் முன்வைக்க,அதற்கு விளக்கமளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்த சூழல் வேறு,தற்போது இருக்கும் சூழல் வேறு.அதை கருத்தில் கொண்டுதான் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும்,தமிழகத்தில் 23 இடங்களில் உள்ளரங்க கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அதற்கு அனுமதி அளிக்க தயாராக இருப்பதாகவும்,மீமுள்ள 24 இடங்களில் தற்போதைக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் கூறப்பட்டது .காரணம் தமிழகத்தில் தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மேலும் தமிழகத்தில் தற்போது நிலவும் சூழல்களை வைத்து உளவுத்துறை கொடுத்துள்ள தகவல்களை யூகமாகவோ ,அனுமானமாகவோ எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் அனுமதி அளிப்பதில் உள்ள சிக்கல்களை புரிந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறை தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

    இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் பேரணியை உள்ளரங்க கூட்டமாக நடத்த விருப்பம் இல்லை என்று மறுப்பு தெரிவிக்கவே ,நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்த பிறகு தமிழகத்தில் 47- இடங்களிலும் பேரணி நடத்த அனுமதி வழங்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி யோசிக்கலாம் என வழக்கை வரும் 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுளளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இதையும் படிங்க: என்ன டெக்னிக்கா? மணலை கடத்துறாங்க பாருங்க.. 100 நாள் வேலை திட்டத்தில் நடந்த அட்டூழியம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....