Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமீண்டும் ஆட்டக்களத்தில் சுரேஷ் ரெய்னா; வெளிவந்த அட்டகாச தகவல்

    மீண்டும் ஆட்டக்களத்தில் சுரேஷ் ரெய்னா; வெளிவந்த அட்டகாச தகவல்

    இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளார்.

    இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியின் 2020 சீசனில் இருந்து விலகினார். பிறகு, ஐபிஎல் 2021-ல் அணிக்கு திரும்பினார். இருப்பினும், 12 ஆட்டங்களில் 160 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இதன் பின்னர் நடைபெற்ற ஏலத்தில் எந்த அணியும் சுரேஷ் ரெய்னாவை ஏலம் எடுப்பதற்கு முன்வரவில்லை. இதைத்தொடர்ந்து ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரெய்னா அறிவித்தார்.

    மேலும், இதற்கு முன்னதாக கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரெய்னா ஓய்வு பெற்றார். 35 வயது ரெய்னா, 2005 முதல் 2018 வரை இந்திய அணிக்காக 18 டெஸ்டுகள், 226 ஒருநாள், 78 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஓய்வு பெற்ற பிறகு சமீபத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் சுரேஷ் ரெய்னா பங்குபெற்றார். இதைத்தொடர்ந்து வேறு ஏதேனும் லீக் போட்டியில் சுரேஷ் ரெய்னா விளையாடுவாரா என்ற ஆவல் ரசிகர்களிடையே இருந்தது. 

    இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான அபுதாபி பத்து ஓவர் கிரிக்கெட் லீக் போட்டியில் டெக்கன் கிளாடியேட்டர்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் ரெய்னா முதல்முறையாகப் பங்கேற்கிறார். 

    மேலும், டெக்கன் கிளாடியேட்டர்ஸ் அணியில் ரஸல், நிகோலஸ் பூரன் போன்ற வீரர்களும் உள்ளார்கள். நவம்பர் 23 முதல் அபு தாபியில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 8 அணிகள் கலந்துகொள்ளும் போட்டியின் இறுதிச்சுற்று டிசம்பர் 4 அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இந்தியா! உலக நாடுகளை கதிகலங்க வைத்த ரிப்போர்ட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....