Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்74 வருடங்களுக்கு பின் பொதுமக்கள் பார்வைக்கு வந்த புளு ஹவுஸ் - அப்படி என்ன ஸ்பெஷல்!

    74 வருடங்களுக்கு பின் பொதுமக்கள் பார்வைக்கு வந்த புளு ஹவுஸ் – அப்படி என்ன ஸ்பெஷல்!

    தென்கொரியா நாட்டின் சியோல் நகரில் புளு ஹவுஸ் எனும் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகை மிகுந்த பாதுகாப்புடன் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் கூரை ஓடுகள் நீல நிறத்தினால் ஆனது. அதனால் தான் இந்த மாளிகைக்கு புளு ஹவுஸ் என பெயரிடப்பட்டது.

    இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பாா்வையிட கடந்த 74 வருடங்களாக அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. பொதுமக்களும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட இத்தனை வருடங்கள் காத்திருந்த நிலையில், தற்போது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    கிழக்காசிய நாடான தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியாக யூன் சியோக்-யூல் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி பதவியேற்றார். அவர், தனது அலுவலகத்தை புளு ஹவுஸில் இருந்து 5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள ராணுவ அமைச்சக வளாகத்திற்கு மாற்றியுள்ளார். இதனையடுத்து, 74 வருடங்களுக்குப் பிறகு, புளு ஹவுஸை பார்வையிடுவதற்கான வாய்ப்பு, தென்கொரியா பொது மக்களுக்கு கிடைத்துள்ளது. அதிக பாதுகாப்பாக இருந்த புளு ஹவுஸ் மாளிகையானது, இப்போது கண்காட்சி வளாகம் போல் காட்சியளித்து வருகிறது. விசித்திர மாளிகையான புளு ஹவுஸை, பொதுமக்கள் மிக நீண்ட வரிசையில் நின்று ரசித்து கண்டுகளித்து வருகின்றனர். ஒரு நாளைக்கு 39 நபர்கள் மட்டுமே, ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஜப்பான் நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொரியா இருந்தது. இந்த காலகட்டத்தில், புளு ஹவுஸ் கவர்னர் மாளிகையாக கட்டப்பட்டது. கடந்த, 1945 ஆண்டு ஜப்பானிடம் இருந்து விடுதலை பெற்றது கொரியா. பின்னர், சில காலங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த புளு ஹவுஸ் மாளிகை. பிறகு 1948 ஆண்டில் தென் கொரியா வசம் வந்தது.

    தென் கொரிய நாட்டின் வசம் வந்த ‘புளூ ஹவுஸ்’ மாளிகையை, 74 வருடங்களுக்குப் பின் முதன்முறையாக மக்கள் பார்வையிட நேற்று அனுமதிக்கப்பட்டது. இந்நிகழ்வு அனைவரிடத்திலும் ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    காதலித்து திருமணம் செய்த குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராமத்து மக்கள்!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....