Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா; இந்தியாவிற்கு சிறப்பு அந்தஸ்து!

    உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா; இந்தியாவிற்கு சிறப்பு அந்தஸ்து!

    ஒவ்வொரு வருடமும் பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவிற்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் உள்ளனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்களின் திரைப்படம் திரையிடப்பட வேண்டும் என்பது, ஒவ்வொரு திரைக்கலைஞர்களின் கனவாக உள்ளது.

    இந்நிலையில் இந்த வருடம் மே 17 ஆம் தேதி 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. இவ்விழாவில், மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையிலான இந்திய நட்சத்திரங்கள் குழு ஒன்று பங்கேற்றது.

    பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான அக்சய் குமார், கிராமப்புற இசையமைப்பாளர் மாமே கான், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் நடிகர் நவாஸூதீன் சித்திக், தென்னிந்திய நடிகைகளான நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி, நடிகர் மாதவன், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோர் பங்கேற்றனர். இந்தியாவைச் சேர்ந்த குழுவிற்கு, கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மாதவன் நடித்த ராக்கெட்டரி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

    பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் மெஜஸ்டிக் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட மார்ச்சு டு பிலிம்ஸின் தொடக்க இரவில், கவுரவ நாடு என்ற அந்தஸ்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டது, சர்வதேச அளவில் தனிகவனத்தைப் பெற்றது இந்தியா. நாட்டுப்புற இசை மற்றும் வான வேடிக்கைகளுடன் இந்திய பாடகர் குழுவின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. அதேபோல, 10 வல்லுநர்கள் கேன்ஸ் நெட்வொர்க்கிங் நிகழ்வில் அனிமேஷன் தினத்தில் பங்கேற்றனர்.

    75 வது கேன்ஸ் திரைப்பட விழாவுடன், ஏற்பாடு செய்யப்பட்ட மார்ச்சே டு திரைப்படத்தில் இந்தியா முதல் நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான 75 வருட உறவுகள், பிரதமர் மோடியின் பாரிஸ் பயணம் மற்றும் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடனான அவரது சந்திப்பு ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

    கோஸ் டு கேன்ஸ் பிரிவில், 5 இந்தியத் திரைப்படங்கள் வெளியிடப்பட இருக்கிறது. அதில் ஜெய்செங் க்சாய் டோஹுதியா (அசாமிஸ், மோரன்) எழுதிய பாக்ஜன், சைலேந்திர சாஹுவின் பைலடிலா (இந்தி, சத்தீஸ்கர்ஹி); ஏக் ஜகா அப்னி, ஏக்தாரா கலெக்டிவ் (இந்தி); ஹர்ஷத் நலவாடே (மராத்தி, கன்னடம், இந்தி) மற்றும் ஜெய் சங்கர் (கன்னடம்) எழுதிய சிவம்மா ஆகியவை அடங்கும். அத்துடன் ஒலிம்பியா ஸ்கிரீன் என்ற ஒரு திரையரங்கம், மே 22 ஆம் தேதி வெளியிடப்படாத 5 இந்திய திரைப்படங்களை திரையிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

    கேன்ஸ் திரைப்பட விழா; இந்திய திரைத்துறையினருக்கு அளிக்கப்படும் உயரிய மரியாதை!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....