Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கேன்ஸ் திரைப்பட விழா; இந்திய திரைத்துறையினருக்கு அளிக்கப்படும் உயரிய மரியாதை!

    கேன்ஸ் திரைப்பட விழா; இந்திய திரைத்துறையினருக்கு அளிக்கப்படும் உயரிய மரியாதை!

    உலக அளவில் திரைப்படத்திற்கான விருதுகளில் ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் விருதுகள் முக்கியமானதாகவும், முதன்மையானதாகவும் கருதப்படுகின்றது. இதற்கு அடுத்ததாக, பெர்லின், வெனிஸ் மற்றும் டொராண்டோ வரிசையில் கேன்ஸ் திரைப்பட விழாவும் சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் வருடந்தோறும் மே மாதத்தில், இவ்விழா நடப்பது வழக்கம். கேன்ஸ் திரைப்பட விழாவில், சர்வதேச பொழுதுபோக்கு திரைப்படங்களுடன், குறும்படம் மற்றும் ஆவணப்படங்கள் போட்டியிடுவது சிறப்பான ஒன்றாகும். மிகச் சிறந்த படத்திற்கு “GOLDEN PALM AWARD” எனும் தங்கப் பனை விருது வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் நடைபெறவிருக்கும் பிரசித்திப் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்திய திரைப் பிரபலங்கள் பல பேருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக அளவில் பல திரைப்பட விழாக்கள் நடைபெற்று வந்தாலும், மிக முக்கியமானதாக கருதப்படும் விழாக்களில் பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவும் ஒன்று. கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில், அகிலம் முழுவதிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருவது வழக்கம்.

    சமீப காலமாக கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்திய திரைப்படங்கள் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. மேலும், இந்தியப் படங்கள் அதிகளவு திரையிடப்பட்டு வருகிறது. இதனால், இந்தியாவைச் சேர்ந்த சினிமா நட்சத்திரங்களுக்கு, எப்போதும் தனி மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், கேன்ஸ் திரைப்பட விழாவின் ஜூரியாக தீபிகா படுகோன் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்வு, இந்திய சினிமாப் பிரபலங்களுக்கு கிடைத்த பெருமை ஆகும்.

    இந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்களான அக்ஷய்குமார், நாவசுதீன் சித்திக் மற்றும் மாதவன், நடிகைகளான நயன்தாரா, பூஜா ஹெக்டே மற்றும் தமன்னா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்தியப் பிரபலங்களான இவர்களுக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நடிகர் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் டிரைலரும் திரையிடப்பட உள்ளது. அதேபோல, நடிகர் மாதவனின் ‘ராக்கெட்டரி’ திரைப்படம் இந்திய அரசின் சார்பாக திரையிடப்பட உள்ளது என்பது, இந்திய சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரும் பெருமையாகும்.

    இந்தக் கோடை மழைக்கு கார சாரமான மசாலா டீ இப்படி செய்தால் சுவையோ சுவை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....