Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபிளே ஆஃப் செல்லுமா பெங்களூரு?? குஜராத் அணியினை வீழ்த்தி நான்காவது இடம் பிடித்தது..

    பிளே ஆஃப் செல்லுமா பெங்களூரு?? குஜராத் அணியினை வீழ்த்தி நான்காவது இடம் பிடித்தது..

    நேற்று நடைபெற்ற 67வது ஐபிஎல் போட்டியானது வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது.

    புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணியினர் ஏற்கனவே பிளே ஆஃப்-ற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    14 புள்ளிகள் பெற்றிருந்த பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பினைத் தக்க வைக்க முடியும்.

    எனவே இந்த போட்டியானது பெங்களூரு அணியினருக்கு மிக முக்கியமான போட்டியாக இருந்தது. இந்நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணிக் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கிணைத் தேர்வு செய்தார்.

    இதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடக்க ஆட்டக்காரர் வ்ரிதிமான் சாஹா 22 பந்துகளுக்கு 31 ரன்கள் அடித்தார். சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியா 47 பந்துகளை எதிர்கொண்டு 62 ரன்கள் அடித்து இறுதிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

    டேவிட் மில்லர் 34 ரன்களும், மாத்தியூ வேட் 16 ரன்களும், ரஷீத் கான் 19 ரன்களும் அடித்திருந்தனர்.

    பெங்களூரு அணித்தரப்பில் ஜோஷ் ஹாசில்வுட் 2 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் மற்றும் ஹஸரங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர். 

    ஆட்டத்தின் 5.2வது ஓவரில் மாத்தியூ வேட் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மேக்ஸ்வெல்லின் பந்தில் எல்பிடபுள்யூ ஆகி நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டார்.  நடுவரின் இந்த முடிவினை எதிர்த்து மாத்தியூ வேட் ரிவியூ கேட்டிருந்தார்.

    இந்த ரிவியூவினில் பந்தானது மாத்தியூ வேடின் பேட்டில் பட்ட பிறகே அவரது காலுக்குச் சென்றது. ஆனால் அல்ட்ரா எட்ஜினில் எந்த விதமான மாறுதலும் காட்டாததால் அவர் அவுட் என்று அறிவிக்கப்பட்டார்.

    இந்த அவுட்டினால் மனமுடைந்த மாத்தியூ வேட் மிகவும் கோபத்துடன் பெவிலியன் திரும்பினார். மூன்றாவது நடுவரின் இந்த முடிவு பார்வையாளர்களையும்  கோபப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    கிங் கோலி..

    169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

    டு பிளெஸ்ஸிஸ் 38 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத்கானின் பந்தில் பாண்டியவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    முதலாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 87 பந்துகளை எதிர்கொண்டு 115 ரன்கள் அடித்தது.

    பிளெஸ்ஸிஸ் அவுட் ஆகிய பிறகு மாக்ஸ்வெல்லுடன் ஜோடி சேர்ந்த கோலி அணியினை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

    இத்தொடர் முழுவதிலும் ஒரு சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த விராட் கோலி முயன்று வந்தார்.

    பல ஆட்டங்களில் சொற்ப ரன்களில் வெளியேறிய விராட் ஒரு சில போட்டிகளில் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆகவும் செய்தார்.

    பல நாட்களாக விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்திற்காக காத்திருந்த பார்வையாளர்கள், அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பினை நேற்று பூர்த்தி செய்தார்.

    54 பந்துகளை எதிர் கொண்ட கோலி 73 ரன்களைக் குவித்தார். அணிக்கு மிக முக்கியமான நேரத்தில் அவரது இந்த பொறுப்பான ஆட்டம் மிகவும் பயனுள்ளதாய் அமைந்தது.

    ரஷீத்கானின் பந்தில் வேடினால் அவுட் செய்யப்பட்டு கோலி வெளியேறினாலும், இறுதி வரை களத்தில் நின்று மேக்ஸ்வெல் ஆட்டத்தினை முடித்து வைத்தார். 18 பந்துகளை எதிர்கொண்ட அவர் 44 ரன்கள் அடித்தார். 18.4வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    குஜராத் தரப்பில் ரஷீத் கான் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 73 ரன்கள் எடுத்த விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    இந்த வெற்றியின் மூலம் நான்காவது இடத்திற்கு பெங்களூரு அணி முன்னேறியுள்ளது.

    ஒரு ஆட்டம் மீதமுள்ள டெல்லி அணி 14 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. வரும் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வேற்றி பெறும் என்றால், ரன் ரேட் அடிப்படையில் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினை எதிர் கொள்கிறது. 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள ராயல்ஸ் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இத்தொடரில் இறுதி ஆட்டத்தில் விளையாடப் போகும் சென்னை அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா என்ற ஏக்கம் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யுமா?? கடந்த வருடம் கோப்பையினை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்??

    எஜமானருக்காக மலைச்சிங்கத்துடன் போராடிய வளர்ப்பு நாய்..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....