Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்எஜமானருக்காக மலைச்சிங்கத்துடன் போராடிய வளர்ப்பு நாய்..!

    எஜமானருக்காக மலைச்சிங்கத்துடன் போராடிய வளர்ப்பு நாய்..!

    அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் வசித்துவரும் எரின் வில்சன் என்பவர் மதிய நேரத்தில் நதிக்கரையோரம் தனது வளர்ப்புப்பிராணியான ‘ஈவா’ என்கிற நாயுடன் உலாவச்சென்றுள்ளார். 

    அந்த நேரத்தில் அங்கு வந்த மலைச்சிங்கம் ஒன்று எரின் வில்சனினைத் தாக்கத்  தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலினால் இடது பக்கத்து தோளில் காயமுற்ற எரின், தனது வார்ப்புப்பிராணியான ஈவாவினை அழைத்துள்ளார்.

    எஜமானரின் குரலைக் கேட்டு ஓடி வந்த ஈவா, நிலைமையறிந்து எரினைத் தாக்கிய மலைச்சிங்கத்துடன் போராடத் தொடங்கியது. சில நொடிகள் மட்டுமே இந்த போராட்டம் நீடித்த நிலையில், அந்த மலைச்சிங்கமானது ஈவாவின் தலையினை கவ்வியது.

    இதனைக் கண்ட எரின் தனது நாயினைக் காப்பாற்ற தன்னால் முடிந்தவரை முயற்சி செய்துள்ளார். அந்த சிங்கத்தின் மீது கற்களை எரிவதின் மூலம் அதனது கவனத்தினை திசைத் திருப்ப முயன்றுள்ளார்.

    நிலைமைக் கைமீறிச் செல்வதை உணர்ந்த எரின் தனது வாகனத்திலுள்ள இரும்பு கம்பியினை எடுக்க ஓடியுள்ளார். அந்த சமயத்தில் அங்கு மோட்டாரில் வந்த மனிதரிடம் உதவி கேட்கவே, அவரும் எரினும் சேர்ந்து அந்த சிங்கத்தினை தாக்க தொடங்கினர்.

    இந்த தாக்குதல்களினால் இறுதியாக அந்த மலைச்சிங்கமானது ஈவா நாயினை விட்டுவிட்டு ஓடியது.

    தாக்குதலுக்கு உள்ளான தனது நாயினை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுள்ளார். நல்ல விடயமாக அந்த நாய்க்கு மேலோட்டமான காயங்களே ஏற்பட்டிருந்தது.

    ‘ஈவா இல்லையென்றால் இந்நேரம் நான் உயிருடன் இருப்பேனா என்று தோன்றவில்லை. ஈவாவின் விசுவாசம் பிரம்மிப்பாய் உள்ளது. அந்த சிங்கத்துடன் சில வினாடிகள் உண்மையிலேயே ஈவா போராடியது. ஆனால் இறுதியாக அவள்(ஈவா) அழுவதை என்னால் கேட்க முடிந்தது. அப்பொழுது தான் அந்த சிங்கம் அவளது தலையினைக் கவ்வியது.’ என்று எரின் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

    ‘முதலில் ஈவாவிற்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றே எண்ணினேன்; ஆனால் அருகினில் வந்து பார்த்த போது தான் தெரிந்தது. அவளது (ஈவா) முகத்தில் காயங்களும், சிராய்ப்புகளும் இருந்தது; மேலும் அவள் வாயிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.’என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    அதிஷ்ட வசமாக அந்த நாய் தப்பித்துள்ளது. எஜமானருக்காக தனது உயிரினையும் கொடுக்கத் துணிந்த ஈவாவின் விசுவாசத்தினை பலர் இணையதளத்தில் பாராட்டி வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....