Monday, March 18, 2024
மேலும்
  Homeவாழ்வியல்ஆரோக்கியம்கருஞ்சீரகம் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

  கருஞ்சீரகம் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

  மருத்துவ குணங்கள் நிறைந்த கருஞ்சீரகம்:

  கருஞ்சீரகம்… இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. சமஸ்கிருதத்தில் `கிருஷ்ண ஜீரகா’, `குஞ்சிகா’, `உபகுஞ்சிகா’, `உபகுஞ்சீரகா’ என்றும், ஆங்கிலத்தில் `Black cumin’, `Small Fennel’ என்றும், இந்தியில் `காலாஜீரா’, `கலோன்ஜி’ என்றும் சொல்வார்கள்.

  மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்’ (Thymoquinone) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.

  இதில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்பு அதிகம் இருப்பதால், தேவையற்ற கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன. சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம்.

  இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த..

  நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகக் காணப்படும். அதனால் இவர்கள் தங்கள் இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்க உரிய உணவு முறைகளை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் இந்த விசயத்தை எதிர்கொள்ள கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தலாம். ஏனென்றால் கருஞ்சீரகம் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகின்றது.

  அதனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் கருஞ்சீரகத்தை அளவான அளவு எடுத்துக்கொள்ளலாம். இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளை இவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம். மேலும், கருஞ்சீரகம் கணைய செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. சுருங்கச் சொன்னால் இவர்களுக்குக் கருஞ்சீரகம் ஒரு வரப்பிரசாதமாகும்.

  கர்ப்பப்பையைத் தூய்மைப்படுத்தும்..

  குழந்தைப்பேறு அடைந்த பெண்களின் கர்ப்பப்பையில் அழுக்குகள் இருக்கக்கூடும். கர்ப்பப்பையைத் தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக அவசியம். இதனால் எதிர்காலத்தில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட தொல்லைகள் வராமல் தடுக்கலாம். மேலும், மீண்டும் கருத்தரிப்பதிலும் சிக்கல் ஏற்படாது. கருஞ்சீரகம் பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பையைச் சுத்தப்படுத்துவதில் கை கொடுக்கின்றது.

  கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும். இதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது பனை வெல்லம் சேர்த்து தினமும் எடுத்துக்கொள்ளும் போது கர்ப்பப்பையில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்கி சுத்தமடையும்.

  சிறுநீரக கற்கள் கரைய

  கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களில் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை குறிப்பிடத்தக்கது. வெந்நீரில் தேன் மற்றும் ஒரு கையளவு கருஞ்சீரகப் பொடியைக் கலந்து கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து பருகி வரச் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் முழுவதுமாக கரையும். இந்த எளிய வீட்டுக் குறிப்பைப் பயன்படுத்திப் பலன் அடையலாம்.

  புற்றுநோய் நெருங்காமல் இருக்க

  கருஞ்சீரகத்தில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இது புற்று நோய் நம்மை நெருங்காமல் பாதுகாத்துக் கொள்ள மிகவும் உதவக் கூடியதாக உள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கணையப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்டவற்றில் இருந்து நம்மைக் காக்கிறது.

  ரத்த அழுத்தம் சீராக

  உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படும் நபர்களுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது. கருஞ்சீரகத்தை சாப்பிடுவதனால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும்.

  உடல் எடையை குறைக்க உதவுகிறது

  கருஞ்சீரகம், நமது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, நாம் பிட் ஆகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில், கருஞ்சீரகத்தை கலந்து தினமும் குடித்து வர , உடல் எடை குறைப்பில் நல்ல மாற்றத்தை காணலாம்.

  பிளே ஆஃப் செல்லுமா பெங்களூரு?? குஜராத் அணியினை வீழ்த்தி நான்காவது இடம் பிடித்தது..

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....