Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்அழகுக் குறிப்புஎப்போதும் அழகாக இருக்க வேண்டுமா? அப்போ, படியுங்கள்!

    எப்போதும் அழகாக இருக்க வேண்டுமா? அப்போ, படியுங்கள்!

    எப்போதும் அழகாக இருக்க வேண்டுமானால், சருமத்தில் சரியான பராமரிப்புக்களை தவறாமல் கொடுக்க வேண்டும். அதுவும் காலநிலை மாறுவதற்கு ஏற்ப நாம் நமது சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுத்து வர வேண்டும். சரும பராமரிப்பு என்று வரும் போது, பலரும் கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கலாம்.

    ஆனால், கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பதை விட, இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பது தான் நல்லது.

    முக சுருக்கத்தை நிக்க உதவும் பால் :

    முகத்தில் தோன்றும் சுருக்கங்களை கட்டுப்படுத்த தினமும் முகத்தில் பால் தடவ வேண்டும். இது முக சுருக்கத்தை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது.

    முகம் வறண்டு போனால் நாம் வழக்கமாக மாய்சரைசர் பயன்படுத்துவோம். ஆனால் அவற்றில் இருக்கும் கெமிக்கல்ஸ் முகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதற்கு பதிலாக முகத்திற்கு மாய்சரைசராக பாலை பயன்படுத்தலாம்.

    தினமும் பாலுடன் 1/2 துண்டு வாழைப்பழத்தை சேர்த்து பேஸ்டு போல் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ முக சுருக்கங்கள் மறைந்து விடும்.

    பேக்கிங் சோடா ஸ்கரப்:

    பேக்கிங் சோடா ஒரு நல்ல எக்ஸ்போலியேட்டர். இது சருமத்துளைகளில் உள்ள அதிகப்படியான எண்ணெய்யை நீக்கும். இதனால் கரும்புள்ளி பிரச்சனைகள் நீங்கும்.

    அதோடு இது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான கருமையைப் போக்க உதவும். அதற்கு கருமையாக இருக்கும் பகுதியை நீரில் நனைத்து, பேக்கிங் சோடா பயன்படுத்தி அப்பகுதியை மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் அப்பகுதியைக் கழுவி, நன்கு உலர்த்திய பின் அப்பகுதியில் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.

    இதேப் போல் வாரத்திற்கு ஒருமுறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

    சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்க

    காற்று மாசுபாடு மற்றும் சூரிய ஒளியால் சருமம் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமானால், ஆப்பிளை முயற்சிக்கலாம். ஆப்பிளில் காப்பர் உள்ளது.

    இது சருமத்தில் மெலனின் உற்பத்திக்கு உதவி, சருமத்திற்கு பொலிவைத் தரும் மற்றும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். அதற்கு மிக்சரில் பாதி ஆப்பிளை போட்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அரைத்து, அதைக் கொண்டு சருமத்தை மென்மையாக தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.

    ஷியா வெண்ணெய்

    ஈரப்பதமூட்டும் கிரீம்கள் மற்றும் சோப்புகளில் ஷியா வெண்ணெய் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஷியா வெண்ணெய் அதன் இயற்கையான வடிவத்தில் எப்படி பயன்படுத்துவது என்று குழப்பமாகலாம். ஷியா வெண்ணெய் ஈரப்பதத்தை பூட்ட உதவுகிறது. மேலும் இது முகப்பருக்கள், வெயிலைத் தடுக்கிறது மற்றும் அரிப்புகளைத் தடுக்கிறது. இந்த சக்திவாய்ந்த மூலப்பொருள் குளிர்காலத்திற்கு உங்கள் சருமத்தின் சிறந்த நண்பராக இருக்கும்.

    கற்றாழை ஜெல்

    கற்றாழை உங்கள் முடிக்கும் சருமத்திற்கும் அதிகபட்ச நன்மைகளை வழங்குகிறது. கற்றாழை அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் வைட்டமின்கள் ஏ மற்றும் சி உடன் சேர்ந்து உங்கள் வறண்ட சருமத்தை குணப்படுத்த உதவும். இது தீக்காயங்கள் மற்றும் வறண்ட சருமத்திற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. மேலும், இது உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி மற்றும் மிகவும் தேவையான நீரேற்றத்தை அளிக்கிறது.

    மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி உள்ள மசூதியை அகற்றக் கோரிய வழக்க; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....