Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகாதலித்து திருமணம் செய்த குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராமத்து மக்கள்!!

    காதலித்து திருமணம் செய்த குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராமத்து மக்கள்!!

    திருச்சியிலுள்ள மண்ணச்சநல்லுர் என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள எதுமலை கிராமத்தில் வசித்து வருபவர் செல்லப்பாப்பா. இவருக்கு வயது 60. இவரது கணவரின் பெயர் வெள்ளையன்.

    செல்லப்பாப்பாவின் மகன் ஜெகதீசன் என்பவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் இருவரும் ஒரே சமுதாயத்தினை சேர்ந்தவர்களாய் இருந்தாலும், அதன் உட்பிரிவினைப் பொறுத்து வேறுபட்டிருந்தனர்.

    இதன் காரணமாக இந்த காதல் திருமணத்தை எதுமலை கிராமத்தின் முக்கியஸ்த்தர்கள் எதிர்த்ததுடன், இத்தனை வருடங்களாக ஜெகதீசன் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

    ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது மட்டுமல்லாது, அவர்களிடம் கோவில் திருவிழா போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு வரி வாங்காமலும் தவிர்த்து வந்துள்ளனர்.

    ஊரினரின் இந்தச் செயல்களால் மனமுடைந்த செல்லப்பாப்பா, தனது குடும்பத்தினரிடம் வரி வசூலித்து, ஊர் திருவிழாக்களில் பங்கேற்க அனுமதி வழங்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார்.

    அக்குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று உய்ரநீதிமன்றத்திடம் செல்லப்பாப்பா உத்தரவு வாங்கி வந்த போதிலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த திருவிழாவில் செல்லப்பாப்பாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இதனால் செல்லப்பாப்பா, நீதிமன்றத்தில் அளித்த புகாரின் பேரில் கிராம நாட்டாமை பெரியசாமி, முக்கிய மனிதர்களாகிய ஆர்.சின்னசாமி, சிவலிங்கம், எஸ்.சின்னசாமி, சௌந்தர்ராஜ், ஷண்முகம், மோகன்தாஸ், வெள்ளைச்சாமி, ஊசானி, கோவிந்தராஜ் ஆகியோர் மீது குடியியல் உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இளையராஜாவின் இசை மழையில் நனையத் தயாரா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....