Monday, March 18, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்இணையத்தில் வைரலாகி வரும் கேக் மேகி! இது என்ன புதுசா?

    இணையத்தில் வைரலாகி வரும் கேக் மேகி! இது என்ன புதுசா?

    சமீப காலங்களில் வித்தியாசமான உணவு பதார்த்தங்களை முயற்சித்து பார்க்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தினை ஈர்த்து வருகின்றன. இந்த வித்தியாசமான உணவுகள் பற்றிய காணொளிகள் பின்னாளில் மீம்ஸ்களாக மாறி உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

    இந்த வகையில் ட்விட்டர் வலைதளத்தில் பகிரப்பட்ட  புதிய உணவு பதார்த்தமானது பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. அந்த உணவானது கேக்கினைக் கொண்டும் இந்தியர்களுக்கு மிகப்பிடித்தமான மேகியினைக் கொண்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    சாலையோரக்கடை ஒன்றினில் இந்த ‘கேக் மேகி’ தயாரிக்கப்பட்டுள்ளது. முதலில் வாணலியில் எண்ணெயினை ஊற்றிய கடைக்காரர், மிளகாய், வெங்காயம் ஆகியவற்றினைத் தூவி நன்கு வறுக்கிறார். அதன் பின்னர் அதில் ஒரு துண்டு கேக்கினை சேர்த்து நன்றாக மசித்து தண்ணீர் ஊற்றி கலக்குகிறார். இந்த கலவையில் மேகியிணைச் சேர்க்கும் கடைக்காரர் இறுதியாக மசாலா பொடியினையும் தூவுகிறார்.

    மேகியானது நன்கு வெந்து கேக் நிறத்திற்கு வந்ததும், அதனைத் தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறார். 

    இந்த ‘கேக் மேகி’ செய்யும் முறையினை படம் பிடித்த உணவு பிரியர் ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மதிய உணவிற்கு ‘கேக் மேகி’ வேண்டுமா? தலைப்புடன் இந்த காணொளியினை பதிவிட்ட அந்த நபர் தலைப்புக்கு அருகில் பல விதமான உணர்ச்சி இமோஜிக்களையும் சேர்த்துள்ளார்.

    இனிப்பு பொருளான கேக் மற்றும் காரமான மேகி சேர்த்து செய்யப்பட்ட இந்த உணவினைப் பற்றி பலரும் தங்களது கருத்தினை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். இரண்டு சுவையான உணவுப் பொருட்களின் ருசியினை இந்த அளவிற்கு எப்படி வீணாக்க முடியும் என்ற கேள்வியினையும் பலர் கேட்டு வருகின்றனர்.

    இதற்கு முன்னர் இதுபோல ‘மேங்கோ மேகி’ என்ற உணவுப்பொருள் வைரலானது. அந்த பதார்தத்தில் மேகியுடன் ஸ்லைஸ் என்ற குளிர்பானம் சேர்க்கப் பட்டது. ஆனால் இந்த ‘கேக் மேகி’யானது அதற்கும் ஒரு படி மேலே இருப்பதாய் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவினை வீழ்த்தியது லக்னோ..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....