Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்இன்றைய பங்குச்சந்தை நிலவரம்; சரிவில் இந்திய பங்குச்சந்தைகள்!!

    இன்றைய பங்குச்சந்தை நிலவரம்; சரிவில் இந்திய பங்குச்சந்தைகள்!!

    வியாழக்கிழமையான இன்று பங்குச்சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ள. அதிகரித்து வரும் பணவீக்கத்தினால் உலக பொருளாதாரம் சரிவடைந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் பணவீக்கத்தின் அளவு 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய புள்ளிவிவர அமைச்சகத்தின் தரவுகள் தெரிவித்தன.

    கடந்த 2014ம் ஆண்டில் இருந்து பார்க்கையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் அளவே மிக அதிகமானதாய் உள்ளது. 2014ம் ஆண்டு மே மாதம் பணவீக்கத்தின் மதிப்பு 8.33 சதவீதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கச்சா எண்ணை தட்டுப்பாடு மற்றும் சமையல் எண்ணையின் விலை உயர்வு போன்றவை இந்த அளவிற்கு பணவீக்கம் உயர காரணமாகக் கருதப்படுகிறது.

    இந்த பணவீக்கத்தின் அளவானது கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.95 சதவீதம் அதிகரித்தும், கடந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.23 சதவீதம் அதிகரித்தும் உள்ளது.

    அதிகரித்து வரும் பணவீக்கத்தினால் பலரும் தங்கள் வசம் உள்ள பங்குகளை விற்று வருகின்றனர். இதனால் பங்குச்சந்தைகள் கடும் சரிவினைச் சந்தித்து வருகின்றன. 

    நிப்டி மற்றும் சென்செக்ஸ் இன்று 2 சதவீதங்களுக்கும் மேல் சரிந்துள்ளன. நிப்டி 430.90 புள்ளிகள் குறைந்து 15,809.40 ஆகவும், சென்செக்ஸ் 1416.30 புள்ளிகள் குறைந்து 52,792.23ஆகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக ஏறிய நிலையில் இருந்த பங்குச்சந்தைகளின் வளர்ச்சி இன்று ஒரே நாளில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்தில் மட்டும் 7 சதவீதம் பங்கு வர்த்தகம் சரிவினை சந்தித்துள்ளது.

    நிப்டியின் பெரும்பாலான நிறுவனங்கள் ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு சரிவினைச் சந்தித்துள்ளன. அதிகபட்சமாக தொழில்நுட்ப துறைகளாகிய இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா மற்றும் டாடா கன்சல்டன்சி போன்ற நிறுவனங்கள் 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரைக் குறைந்துள்ளன.

    ஐடிசி 3.3 சதவீதமும், ஜேகே லட்சுமி சிமெண்ட்ஸ் 7.3 சதவீதமும் உயர்ந்துள்ளன.

    தங்கத்தின் விலை இன்று சிறிதளவு உயந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 8 ருபாய் உயர்ந்து 4,747ஆகவும், சவரனுக்கு 64 ருபாய் உயர்ந்து 37,976ஆகவும் உள்ளது.

    ஒரு கிராம் வெளியானது 30 காசுகள் குறைந்து 65.10ஆகவும், 8 கிராமிற்கு 2 ருபாய் 40 காசுகள் குறைந்து 520.80ஆகவும் உள்ளது.

    கிரிப்டோ வர்த்தகத்தினைப் பொறுத்த அளவு பிட்காயினின் விலை 22,80,872ஆகவும், எத்திரியத்தின் விலை 1,51,870ஆகவும் உள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் இனி இதற்கு அனுமதி உண்டாம்; அரசு அறிவிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....