Tuesday, March 19, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்இயர்போன் மார்க்கெட்டில் களமிறங்கும் ஓப்போ நிறுவனம் : புது மாடலை அறிமுகம் செய்தது

    இயர்போன் மார்க்கெட்டில் களமிறங்கும் ஓப்போ நிறுவனம் : புது மாடலை அறிமுகம் செய்தது

    இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் ஓப்போ நிறுவனம், தன்னுடைய ஒரிஜினல் வயர்லெஸ் இயர்போனான, இயர்பட்ஸ் என்கோ ஏர் 2வை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த மலிவு விலை இயர்போனை அறிமுகம் செய்வதன் மூலம் இந்திய இயர்போன் மார்க்கெட்டில் வேகமாக முன்னேறுகிறது ஓப்போ நிறுவனம். தற்பொழுது உச்சத்தில் உள்ள போட் மற்றும் ரியல்மீ ஆகிய நிறுவனங்களை மார்க்கெட்டில் சந்திக்கப் போகும் இந்த இயர்போனில் இரைச்சலை ரத்து செய்யும் மற்றும் டாப் எண்ட் போன்ற அம்சங்கள் இல்லை.

    ஆனால், அதனைப் பற்றி கவலை இல்லாதவர்களுக்கு இந்த இயர்போன் மிகவும் சிறப்பானதாக இருக்கும். மேலும், இது ஒளிஊடுருவக்கூடிய ஜெல்லி அமைப்புடன் வருகிறது. எனவே, நீங்கள் வெளிப்புறம் இருந்தே உள்ளிருக்கும் இயர் பட்களை பார்க்க முடியும். ஆகையால் இதனை எடுத்து செல்பவர்களுக்கு இது ஒரு வசீகரத்தைக் கொடுக்கும். 

    கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வெளியாகும் இந்த இயர்போன்களை பிளிப்கார்ட் மற்றும் ஓப்போவின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை தளத்தில் வாங்கி கொள்ளலாம். இதன் அடிப்படை விலை ரூபாய் 2,499 தில் இருந்து தொடங்குகிறது. 

    ஓப்போ என்கோ ஏர் 2 இயர்போன்கள் இரண்டாம் ஜெனெரேஷன் ஆப்பிள் இயர்போன்களைப் போலவே உள்ளன. ஆனால், இவை ஆப்பிள் இயர்பட்களை விட காதுகளில் கட்சிதமாகப் பொருந்துகின்றன. ஒவ்வொரு இயர்பட்டிலும் பாஸ்ட் இணைப்பு அம்சம் உள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன்கள் இயர்பட்டுக்களை வேகமாக இணைத்து கொள்ளும். 

    இந்த ஓப்போ இயர்போனில் உள்ள ஒவ்வொரு இயர்பட்டிலும் 13.4 மில்லி மீட்டர் டைனமிக் டிரைவர் உள்ளது. இது பாஸ்ட் ரிச் ஒளியை வெளிப்படுத்தும் என்பதால் EDM மற்றும் ஹாலிவுட் இசைகளை இதில் சிறப்பாக கேட்கலாம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

    லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றில் வயரில்லா முறையில் இணைய ப்ளூடூத் 5.2 முறை பயன்படுத்தப்படுவதால், கேமிங் போன்றவைகளுக்கு இது மிகப் பொருத்தமாக இருக்கும். Hey Melody செயலி மூலம் நீங்கள் இந்த இயர்போனை ஆன் மற்றும் ஆப் செய்து கொள்ளலாம். இதே செயலியில் என்கோ சவுண்ட் எபெக்ட்டுகளை இயக்கவும், இயர்பட்களில் உள்ள பார்ம்வேர்களை புதுப்பிக்கவும் தேவையான அம்சங்கள் உள்ளன. 

    இந்த இயர்பட்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரம் பயன்படுத்த முடியும் என ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது. சார்ஜிங் கேஸில் 440 மெகா ஆம்பியர் பேட்டரியும், இயர்பட்டில் 27 மெகா ஆம்பியர் பேட்டரியும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய சார்ஜ் கேஸின் அடிப்பகுதியில் சி வகை போர்ட் உள்ளது. இந்நிறுவனத்தின் கூற்றுப்படி இதனை சார்ஜ் செய்ய 1.5 மணிநேரமும், இயர்பட்டோடு சேர்த்து சார்ஜ் செய்ய 2 மணிநேரமும் ஆகும் என தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....