Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவாழ்வியல்நேரத்தை சரியாக செலவிட இதோ உங்களுக்கான வழிமுறைகள்!

    நேரத்தை சரியாக செலவிட இதோ உங்களுக்கான வழிமுறைகள்!

    யாரை கேட்பீர்களாயினும் நேரமில்லை நேரமில்லை என்றே தான் சொல்வர். ஏன் நாமும் அப்படித் தானே சொல்வோம். ஆனால் நீங்கள் ஒரு நாள் முழுவதும் என்ன செய்கின்றீர்கள் என்றுப் பார்த்தால் உங்களுக்கே அதில் தெரியும் எவ்வளவு நேரத்தை வீணாக செலவிட்டுள்ளோம் என்று. அப்படி வீணாக்காமல் நேரத்தை சரியாக செலவிட சில வழிமுறைகள் உங்களுக்காக,

    • முதலில் நீங்கள் நேரத்தை எப்படி செலவிட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஆராயுங்கள், பின்பு அதில் எது தேவை எது தேவை அற்றது என்பதைக் கண்டறியுங்கள். 
    • ஒருநாளில் நீங்கள் செய்ய வேண்டியவற்றை திட்டமிட்டு செய்யுங்கள். குறிப்பாக சந்திப்பு நிகழ்வுகள், முக்கிய கடமைகள் என தனித் தனியே நேரத்தை குறிப்பிட்டு வைத்துக் கொள்ளுங்கள். 
    • குறிப்பிட்ட வேலைகளுக்கும் வேறொரு வேலைக்கும் சம்மந்தம் இல்லாதவற்றை ஒரே நேரத்தில் செய்வதைப் தவிர்ப்பது நல்லது.  ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பல வேலைகளைச் செய்வதையும் தவிர்க்க வேண்டும். 
    • நீங்கள் தொகுக்கும் நேரமானது முக்கிய விடயங்களுக்கு முதலுரிமைக் கொடுப்பது நல்லது. அதுதான் சிறந்ததாகவும் இருக்கும். 
    • சில வேலைகள் ஒன்றாக சேர்த்து செய்வதுப்போல் இருக்கும் அப்படி செய்கையில் வேலைகள் சுலபமாக முடியும். 
    • உங்களுக்கு சிறிதும் தேவையற்ற வேலைகள் அல்லது முக்கியமில்லாத சிலவற்றை அப்போதே வேண்டாம் என்று நிறுத்துவதும் சொல்லுவதும் தான் மிக முக்கியமான விடயம். உங்கள் வேலைகளில் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது அடுத்தவருக்காக நீங்கள் மெனக்கெட வேண்டாம்.
    • நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையின் அளவையும் நேரம் குறிப்பிட்டு செய்தால் நல்லது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு வேலையை எடுத்தால் அதற்கான நேரத்தை இந்த மணிக்குள் முடிக்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்து வைப்பது அவசியம்.
    • மிகவும் முக்கியமான ஒரு விடயம் ஒவ்வொரு வேலையையும் செய்து முடித்த உடன் இடைவேளை எடுப்பது நல்லது. அப்போது தான் மனரீதியாக அடுத்த வேலைக்கு தேவையான புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். எடுத்துக்காட்டாக, சிறிய விளையாட்டு, நடத்தல், பிடித்த இசை ஒன்றைக் கேட்பது போன்றவை.  
    • நீங்கள் செய்யும் வேலைகளுக்கு தேவையான பொருள்களை முன்பே ஏற்பாடு செய்து வைப்பது இன்னும் வேலையை சுலபமாகச் செய்ய உதவும். எழுத வேண்டும் என்று நினைக்கின்றீர்களா அதற்கு தேவை புத்தகமும் பேனாவும் நீங்கள் அமரும் இடத்தின் தூய்மையும் இதே போல் உங்களுக்கு தேவையான கோப்புகளை முன்னரே சேகரித்து வைப்பது போன்றவை.
    • மிக மிக முக்கியமான ஒன்று கவனச் சிதறலைக் குறைப்பது, தேவையற்ற அழைப்புகள், குறுஞ்செய்திகள், இணைய உலகில் மூழ்குதல், போன்றவற்றை தவிர்த்தால் உங்கள் நேரத்தை இன்னும் சேமிக்கலாம்.

    ‘காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது’ என்று பழமொழி உண்டு அதை மனதில் வைத்தாலே போதும் அனைத்தும் சரியான நேரத்தில் நடக்கும்.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....