Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்எச்சரிக்கையாக இருங்கள்.. உருமாறும் ஓமிக்ரானால் மீண்டும் ஒரு கொரோனா அலை; உலக சுகாதார அமைப்பு

    எச்சரிக்கையாக இருங்கள்.. உருமாறும் ஓமிக்ரானால் மீண்டும் ஒரு கொரோனா அலை; உலக சுகாதார அமைப்பு

    சர்வதேச அளவில் கொரோனா பொது சுகாதார அவசரநிலை தொடர்ந்து இருப்பதாகவும் வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மரபணு மாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸால், மேலும் ஒரு கொரோனா அலை வீசக்கூடும் என உலக சுகாதார மைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாத எச்சரிக்கை அளித்துள்ளார்

    புனேவில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:

    ஓமிக்ரானின் 300 க்கும் மேற்பட்ட துணை வகைகள் உள்ளன. இப்போது தொடர்புடையது எக்ஸ்பிபி என்று நான் நினைக்கிறேன். இது ஒரு மறுசீரமைப்பு வைரஸ் ஆகும். சில மறுசீரமைப்பு வைரஸ்களை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். இது மிகவும் நோயெதிர்ப்பை தவிர்க்கிறது. 

    இதையும் படிங்க: 66 குழந்தைகள் பலியான சம்பவம்; இந்திய இருமல் மருந்துகள்தான் காரணமா? தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

    அதாவது இது ஆன்டிபாடிகளை கடக்க முடியும். எக்ஸ்பிபி காரணமாக சில நாடுகளில் தொற்றுநோய்களின் மற்றொரு அலையை நாம் காணலாம். இதன் வீரியம் பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை. 

    வைரஸ் உருவாகும்போது, ​​அது மேலும் பரவக்கூடியதாக மாறும். சர்வதே அளவில் கொரோனா பொது சுகாதார அவசரநிலை தொடர்ந்து இருக்கிறது. மேலும் வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் 8,000 முதல் 9,000 இறப்புகள் பதிவாகி வருகின்றன. 

    இதனால், தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று நாங்கள் கூறவில்லை; அதாவது அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் கருவிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், நம்மிடம் இப்போது பல கருவிகள் இருக்கின்றன; மிக முக்கியமான விஷயம் தடுப்பூசிகள்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....