Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்66 குழந்தைகள் பலியான சம்பவம்; இந்திய இருமல் மருந்துகள்தான் காரணமா? தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

    66 குழந்தைகள் பலியான சம்பவம்; இந்திய இருமல் மருந்துகள்தான் காரணமா? தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

    காம்பியா நாட்டில் இருமல் மருந்துகளால் குழந்தைகள் இறந்தது ஒரு தீவிரமான பிரச்சனை என்று ஆய்வாளர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

    அரியானாவில் சோனிபட்டில் உள்ள மெய்டன் மருந்து நிறுவனம் 4 வகையான இருமல் மருந்துகளை தயாரித்து வருகிறது. இவை ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காம்பியா நாட்டில் இந்த மருந்துகளை எடுத்துக்கொண்ட 66 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகின. 

    இந்த தகவல்களை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு இந்த மருந்துகளில் டை எத்தலின் கிளைக்கால் அல்லது எத்தலின் கிளைக்கால் நச்சு கலந்து இருக்கலாம் என தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

    வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அமைப்பின் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புனேவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் கலந்து கொண்டார். 

    இதையும் படிங்க: இனி இருமல் வந்தா ‘நோ’ மருந்து; 99 குழந்தைகள் பலியானதால் இந்தோனேசியா அதிரடி நடவடிக்கை

    அப்போது அவர் பேசியதாவது:

    இந்த மருந்துகளில் டை எத்திலின் கிளைக்கால் நச்சு கலந்திருக்கலாம் என்பதை நிரூபிக்க மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு, அறிக்கையை வழங்கியது. இது மிகவும் தீவிரமான பிரச்சினை மற்றும் இது மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அளவிலான மருந்து கட்டுப்பாட்டாளர்கள் உள்ளனர். 

    வெவ்வேறு மாநிலங்களின் கட்டுப்பாட்டாளர்கள் உண்மையில் ஒன்றாக வேலை செய்யவோ அல்லது ஒருவருக்கொருவர் இன்னொருவரின் தயாரிப்புகளை ஆய்வு செய்யவோ வழிமுறை இல்லை. 

    இங்கே அவர்களின் செயல்பாடுகளை ஒத்திசைக்க வேண்டிய அவசியம் உள்ளது.பொதுவான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும் என்றால் எங்களிடம் மிகவும் வலுவான ஒழுங்குமுறை அமைப்பு உள்ளது என்று நிரூபிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

    இதையும் படிங்க: பயணிகள் கவனத்திற்கு, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் தமிழகத்தில் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....