Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337 கோடி அபராதம்; இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி நடவடிக்கை

    கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337 கோடி அபராதம்; இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி நடவடிக்கை

    முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கூகுள் நிறுவனத்துக்கு 1,337.76 கோடி ரூபாய் இந்திய தொழில் போட்டி ஆணையம் அபராதம் விதித்துள்ளது. 

    ஆண்ட்ராய்டு அறிதிறன் பேசிகளில் முதன்மையான இடத்தை பெறும் நோக்கில் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இந்திய தொழில் போட்டி ஆணையம் சிசிஐ விசாரணை நடத்தியது.

    சர்வதேச அளவில் பெரும் புகழ்பெற்ற கூகுள் நிறுவனம் சந்தையில் இடத்தைப் பிடிப்பதற்கான நோக்கில் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அந்த ஆணையம் உறுதி செய்தது. 

    இதையடுத்து, கூகுள் நிறுவனத்துக்கு 1,337.76 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக இந்திய தொழில் போட்டி ஆணையம்  நேற்று (அக்டோபர் 20) வியாழக்கிழமை அறிவித்தது. 

    இதுமட்டுமின்றி, முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கூகுள் நிறுவனம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இருக்கும் கால இடைவெளிக்குள் தனது வர்த்தக செயல்பாட்டு முறையை கூகுள் நிறுவனம் மாற்றிக் கொள்ள வேண்டும் என இந்திய தொழில் போட்டி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: சொன்னதை செய்வார் பிரதமர் மோடி! இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக, அண்ணாமலை போட்ட ட்வீட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....