Friday, March 15, 2024
மேலும்
    Homeவானிலைதமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

    தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

    கன்னியாகுமரி , திருநெல்வேலி , தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

    இதுகுறித்து இன்று (அக்டோபர் 21 ) நண்பகல் 1.40 மணிக்கு சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையின் படி:

    அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் இன்று நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22 ஆம் தேதிவாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும், பிறகு வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக 24-ஆம் தேதி வாக்கில் வலுபெறக்கூடும். பிறகு 25 ஆம் தேதிவாக்கில் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

    இதனால் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மேலும் கன்னியாகுமரி , திருநெல்வேலி , தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும்,

    ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்கமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து வெளிவந்த புதிய அறிவிப்பு…

    சென்னையை பொறுத்துவரை :

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் .

    கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை :

    தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது .

    அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் தலா 11 செ.மீ., மழையும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தலா 9 செ.மீ., மழையும் ,மதுரை வாடிப்பட்டி ,புதுக்கோட்டை ஆவுடையார்கோயி ல், சிவங்கை அருகே திருபுவனம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது .

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    21.10.2022: லட்சத் தீவு, மாலத் தீவு பகுதிகள் ,கு மரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதிகள் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் ,இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் .

    கேரளா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் ,இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் .

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ,மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் ,இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

    இதையும் படிங்க: மேற்கிந்திய தீவுகள் அணியை வெளியனுப்பிய அயர்லாந்து….இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....