Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு108 ஆம்புலன்ஸால் அடுத்தடுத்து நடந்த கோர சம்பவங்கள்; நிறைமாத கர்ப்பிணி உட்பட 2 பெண்கள் பலி

    108 ஆம்புலன்ஸால் அடுத்தடுத்து நடந்த கோர சம்பவங்கள்; நிறைமாத கர்ப்பிணி உட்பட 2 பெண்கள் பலி

    திருவள்ளூரில் அவசர ஊர்தி வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் பாதுகாவலர் உயிரிழந்தார். 

    திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சியைச் சேர்ந்தது வெண்மனம் புதூர் என்ற கிராமம். இந்தச் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தவேல். இவருக்கு வயது 56. இவர் மப்பேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். 

    இந்நிலையில், இரவு பணியை முடிதத்தும் நேற்று வியாழக்கிமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அவர் கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம் நோக்கி சென்ற அவசர ஊர்தி வாகனம் 108 இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

    இதில் பலத்த காயமடைந்த ஆனந்தவேலை மீட்ட பொதுமக்கள் அவரை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆனந்தவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

    இதுகுறித்து கடம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த ஓட்டுநர் சக்கரவர்த்தியின் மகன் செந்தில் குமார், அவசர ஊர்தி வாகனத்துடன் மப்பேடு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். 

    இதேபோல், சிவகங்கையில் இளையாங்குடி அருகே மரத்தில் அவசர ஊர்தி வாகனம் மோதியதில் கர்ப்பிணி பெண் நிவேதா மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது குறிபிடத்தக்கது.

    இதையும் படிங்க: மேற்கிந்திய தீவுகள் அணியை வெளியனுப்பிய அயர்லாந்து….இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....