Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'இத நான் சொல்லலாமானு தெரில'....விஜய் குறித்து மனம் திறந்த 'கோமாளி' பட இயக்குநர்!

    ‘இத நான் சொல்லலாமானு தெரில’….விஜய் குறித்து மனம் திறந்த ‘கோமாளி’ பட இயக்குநர்!

    நடிகர் விஜய் குறித்து கோமாளி திரைப்பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்..

    தமிழ்த் திரையுலகில் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய். இவருக்கென்று பெரும் ரசிக பட்டாளம் இந்திய அளவில் உள்ளது. இவரின் திரைப்படங்கள் வெளியாகும் நாள்கள், திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. 

    விஜய் நடித்து ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான், ‘லவ் டுடே’! இத்திரைப்படத்தில், ரகுவரன், சுவலட்சுமி மற்றும் கரண் ஆகியோரும் நடித்திருந்தனர். 

    மாபெரும் வெற்றிப் பெற்ற இத்திரைப்படத்தின் டைட்டிலை, இளம் இயக்குநர் ஒருவர் கைப்பற்றினார். கோமாளி திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகிவரும் திரைப்படத்திற்கு ‘லவ் டுடே’ என்றத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

    இந்த ‘லவ் டூடே’ திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளிவந்த இரு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுமட்டுமல்லாமல், இத்திரைப்படத்தின் ட்ரைலர், இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 

    இந்நிலையில், ‘லவ் டுடே’ திரைப்படத்திற்காக ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பிரதீப் ரங்கநாதன், ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, கோமாளி திரைப்படம் வெளியான பின் இவர் நடிகர் விஜய்யை சந்தித்து ஒரு கதை சொல்லியுள்ளார். அந்த கதை விஜய்க்கு பிடித்துள்ளது. ஆதலால், ‘வாய்ப்பு கிடைத்தால் எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன்’ என அவர் தெரிவித்துள்ளார். இத்தகவலை பகிரும் முன்பு ‘இத நான் சொல்லலாமானு தெரில’ என்றபடி ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 4 பேரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி அதிரடி உத்தரவு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....