Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விதிகளை மீறிய பெட்ரோல் பங்கை அதிகாரிகள் தகரத் தடுப்புகளால் அடைத்ததால் பரபரப்பு!

    விதிகளை மீறிய பெட்ரோல் பங்கை அதிகாரிகள் தகரத் தடுப்புகளால் அடைத்ததால் பரபரப்பு!

    காரைக்காலில் மத்திய தரைவழி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விதிகளை மீறிய பெட்ரோல் பங்கை அதிகாரிகள் தகரத் தடுப்புகளால் அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    காரைக்காலை அடுத்த வாஞ்சூரில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குகள் மத்திய தரைவழி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அனுமதி பெறவில்லை என்று கூறப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுக்குள் அனுமதியைப் பெறாத பெட்ரோல் பங்குகளுக்கு மத்திய தரைவழி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ரூ.5 லட்சம் அபராதத்தையும் அறிவித்தது.

    இருந்தும் நெடுஞ்சாலையில் இயங்கி வரும் பெட்ரோல் பங்குகள் மேற்கண்ட அனுமதி குறித்து அலட்சியம் காட்டின. மேலும், இது தொடர்பாக நாகப்பட்டினத்தை சேர்த்த சுஜாதா என்பவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் மத்திய தரைவழி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அனுமதி பெறாத வாஞ்சூரில் இயங்கும் இரு பெட்ரோல் பங்குகளை மூட நீதிமன்றம் மத்திய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து நேற்று பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் சந்திரசேகரன் தலைமையில் அதிகாரிகள் வாஞ்சூர் தேசிய நெடுஞ்சாலைக்கு விரைந்தனர். வாஞ்சூரில் மத்திய தரைவழி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அனுமதியின்றி குபேரன் என்பவரின் பெட்ரோல் பங்க் மூடப்பட்டது. பின்னர் நெடுஞ்சாலைக்கும் பங்கிற்கு இடையில் இருக்கும் சாலையை தகர தடுப்புகளால் மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    இதுபோல் உள்ள புதுச்சேரி அரசு கான்பெட் நிறுவன பெட்ரோல் பங்கும் மத்திய தரைவழி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அனுமதியின்றி இயங்குவதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த பெட்ரோல் பங்கையும் அதிகாரிகள் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவலால் வாஞ்சூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த வார ரிலீஸ் என்னென்ன? ஓடிடி-க்கும் வரும் படங்கள் என்னென்ன? – ஒரு பார்வை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....