Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி; ஷகிப்‌ அல்‌ ஹசன்‌ தலைமையில் வங்கதேச அணி அறிவிப்பு..

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி; ஷகிப்‌ அல்‌ ஹசன்‌ தலைமையில் வங்கதேச அணி அறிவிப்பு..

    இந்தியாவுக்கு எதிரான முதல்‌ டெஸ்டில்‌ விளையாடவுள்ள வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது. 

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 

    இந்நிலையில்,  டிசம்பர்‌ 14 அன்று தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஷகிப்‌ அல்‌ ஹசன்‌ தலைமையில் வங்கதேச அணி இந்தியாவுக்கு எதிராக களமிறங்குகிறது. 

    மேலும், வங்கதேச அணியின்‌ முந்தைய டெஸ்ட்‌ தொடரில்‌ இடம்பெறாத  முஷ்‌ஃபிகுர்‌ ரஹிம்‌, யாசிர்‌ அலி, டஸ்கின்‌ அஹமது ஆகியோர்‌ மீண்டும்‌ இந்த டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுள்ளார்கள்‌.

    வங்கதேச டெஸ்ட்‌ அணி

    ஷகிப்‌ அல்‌ ஹசன்‌ (கேப்டன்‌), மஹ்முதுல்‌ ஹசன்‌ ஜாய்‌, நஜ்முல்‌ ஹுசைன்‌ ஷான்டோ, மோமினுல்‌ ஹக்‌, யாசிர்‌ அலி, முஷ்‌ஃபிகுர்‌ ரஹிம்‌, லிட்டன்‌ தாஸ்‌, நுருல்‌ ஹசன்‌, மெஹித்‌ ஹசன்‌ மிராஸ்‌, தைஜுல்‌ இஸ்லாம்‌, டஸ்கின்‌ அஹமது, கலீத்‌ அஹமது, எபடாட்‌ ஹுசைன்‌, ஷொரிஃபுல்‌ இஸ்லாம்‌, ஸாகிர்‌ ஹுசைன்‌, ரஹ்மான்‌ ராஜா, அனமுல்‌ ஹக்‌.

    இந்த வார ரிலீஸ் என்னென்ன? ஓடிடி-க்கும் வரும் படங்கள் என்னென்ன? – ஒரு பார்வை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....