Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாண்டஸ் புயல் எச்சரிக்கை; 10 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புப் படையினர்

    மாண்டஸ் புயல் எச்சரிக்கை; 10 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புப் படையினர்

    மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்றுள்ளனர். 

    வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் – புதுவை- தெற்கு ஆந்திர கடற்கரையில் புதுச்சேரிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே 9 ஆம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

    இந்த மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகத்தில் நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும். 

    மேலும் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    மேலும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், பேரிடர் மீட்பு படையினர் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு விரைந்து சென்றுள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீது படையின் 396 வீரர்கள் 12 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். 

    இந்த 12 குழுக்களும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

    அதே சமயம் அந்தந்த மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    மாண்டஸ் புயல் எச்சரிக்கை; எந்தெந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....