Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்யூமாஜின் சென்னை என்ற தலைப்பில் ஆசியாவின் மிகப்பெரிய உச்சி மாநாடு அறிவிப்பு; அமைச்சர் மனோ தங்கராஜ்

    யூமாஜின் சென்னை என்ற தலைப்பில் ஆசியாவின் மிகப்பெரிய உச்சி மாநாடு அறிவிப்பு; அமைச்சர் மனோ தங்கராஜ்

    தமிழ்நாடு முதலமைச்சர் நிர்ணயித்துள்ள 100 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியில் 10 சதவிகித பங்களிப்பை தகவல் தொழில்நுட்ப துறை அளிக்கும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழிற் கட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள யூமாஜின் சென்னை என்ற தலைப்பில் தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் வளர்ப்பு குறித்த ஆசியாவின் மிகப்பெரிய உச்சி மாநாடு குறித்து கிண்டியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அப்போது பேசிய அவர்

    யூமாஜின் சென்னை என்ற தலைப்பில் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர், திறன் வளர்ப்புகள், கண்டுபிடிப்புகள் குறித்த ஆசியாவின் மிகப்பெரிய உச்சி மாநாடு அடுத்த ஆண்டு 2023 மார்ச் 23,24,25 ஆகிய மூன்று நாட்கள் சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

    தமிழகத்தில் 2030 ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் டாலர் என இலக்கு நிர்ணயித்து உள்ளோம். அதில் 10 சதவிகித பங்களிப்பை தகவல் தொழில்நுட்ப துறை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என ஒரு தகவல் பரவி இருந்தாலும் பிற மாநிலங்களை பொறுத்தவரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் துறை சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி முதல் கட்ட நகரங்கள் இரண்டாம் கட்ட நகரங்கள் மூன்றாம் கட்ட நகரங்கள் என அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியும் சிறப்பாக இருப்பதாகவும் அதனால் பொருளாதார மந்த நிலை பாதிப்பு தமிழகத்திற்கு இருக்காது என நம்பிக்கை தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத் துறையை பொருத்தவரை தனியார் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்ய வருவதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆசிய அளவில் நடைபெறக்கூடிய இந்த மாநாடு புதிய முயற்சிகளுக்கும் ,தொடக்க நிறுவனங்களுக்கும் ஒரு பாலமாக அமையும்.

    மேலும் எல்காட் நிறுவனம் மூலம் திருச்சி மதுரை திருநெல்வேலி கன்னியாகுமரி என தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவைகள் செயல்பாட்டுக்கு வருகிற பட்சத்தில் எல்காட் நிறுவனத்தின் வருவாய் மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தார்.

    மாண்டஸ் புயல் எதிரொலி; அதிமுக சார்பில் நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்ட தேதி மாற்றியமைப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....