Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இந்த வார ரிலீஸ் என்னென்ன? ஓடிடி-க்கும் வரும் படங்கள் என்னென்ன? - ஒரு பார்வை

    இந்த வார ரிலீஸ் என்னென்ன? ஓடிடி-க்கும் வரும் படங்கள் என்னென்ன? – ஒரு பார்வை

    வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பல திரைப்படங்கள் திரையரங்குகளை நோக்கி வருகின்றன. அதேபோல, திரையரங்குகளில் தங்களின் ஓட்டத்தை முடித்துவிட்டு ஓடிடி தளத்திற்கும் திரைப்படங்கள் வாரந்தோறும் வருகின்றன. இதுமட்டுமல்லாமல், ஓடிடி தளத்திலேயே நேரடியாக திரைப்படங்களும், இணையத்தொடர்களும் வெளியாகின்றன.

    அப்படியாக இந்த வாரமும் பல படங்கள் திரையரங்குகளிலும், ஓடிடியிலும் வரவுள்ளன. அவைகள் என்னென்ன திரைப்படங்கள் என்பது  குறித்து இங்கே காணலாம்.

    ஃபால் (fall)

    நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள இணையத்தொடர்தான், ஃபால் (fall). சித்தார்த் ராமசாமி இந்தத் தொடரை இயக்கியுள்ளார். சமீபத்தில் இத்தொடரின் டிரெய்லர் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. 

    ‘வெர்டிஜ்’ எனப்படும் கனடிய இணையத் தொடரின் ரீமேக்தான், இந்த ஃபால். இந்தத் தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    க்ரைம் திரில்லர் முறையில் உருவாகியுள்ள இந்தத் தொடரானது டிசம்பர் 9-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. 

    விட்னஸ் 

    ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோஹிணி, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடிக்க, புகைப்பட கலைஞர் தீபக் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள திரைப்படம்தான், விட்னஸ். 

    இத்திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையில் கபிலன் பாடல் எழுத பிலோமின் ராஜ் எடிட் செய்துள்ள இப்படம் மலக்குழி மரணங்கள் பற்றி பேசுகிறது. இத்திரைப்படம், சோனி லைவ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது. 

    ரத்தசாட்சி 

    எழுத்தாளர் ஜெயமோகனின் ‘கைதிகள்’ சிறுகதையைத் தழுவி உருவாகியுள்ள திரைப்படம்தான், ரத்தசாட்சி. இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியுள்ளது. 

    இத்திரைப்படத்தில், கண்ணா ரவி, இளங்கோ குமாரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், இத்திரைப்படமானது டிசம்பர் 9-ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

    யசோதா

    நடிகை சமந்தா நடிப்பில் ஹரி-ஹரீஸ் இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் 11-ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியான திரைப்படம்தான், யசோதா.

    இந்த யசோதா திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உலகம் முழுவதும் 40 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில், யசோதா திரைப்படம் டிசம்பர் 9-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

    காஃபி வித் காதல் 

    கலகலப்புக்கு பெயர் போன சுந்தர். சி இயக்கத்தில் ஜிவா, ஜெய், ஶ்ரீகாந்த் நடித்த திரைப்படம்தான், காஃபி வித் காதல். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இப்படத்தில் மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 

    இத்திரைப்படத்தை அவ்னி சினிமா மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்தது. கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் தற்போது ஜி5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

    நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் 

    வடிவேலு கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம்தான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். முன்னதாக, நாய் சேகர் எனும் கதாப்பாத்திரத்தில் வடிவேலு கலக்கியதை, அதனால் வயிறு வலிக்க ரசிகர்கள் சிரித்ததை எவரும் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். 

    சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. நீண்ட காலத்துக்குப் பிறகு வடிவேலு கதாயநாயகனாக நடிப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்  டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

    வரலாறு முக்கியம் 

    சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா நடித்துள்ள படம், ‘வரலாறு முக்கியம்’. காமெடி மற்றும் காதலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    காஷ்மீர் பர்தேஷி, பிரக்யா நாகரா, கே.எஸ்.ரவிகுமார், விஜி ரத்தீஷ், விடிவி கணேஷ், சித்திக் உட்பட பலர் நடித்துள்ள இத்திரைப்படமானது வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

    எஸ்டேட் 

    கலையரசன், ரம்யா நம்பீசன் மற்றும் சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இயக்குனர் கார்த்திக் வில்வக்ரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் – திரில்லர் திரைப்படம்தான், ‘எஸ்டேட்’.

    டிவைன் புரொடக்சன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்துள்ள ‘எஸ்டேட்’ திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இத்திரைப்படமானது, டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

    பாபா

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாபா. ரஜினிகாந்த்‌ நடிப்பில்‌, அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்து வெளியிட்ட இப்படத்தை அண்ணாமலை, வீரா, பாட்ஷா படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக சுரேஷ்‌ கிருஷ்ணா இயக்கினார்‌.

    ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும்‌, முக்கிய வேடங்களில்‌ ரியாஸ்‌ கான்‌, கவுண்டமணி, தில்லி கணேஷ்‌, சுஜாதாம்‌ நம்பியார்‌, கருணாஸ்‌ உள்ளிட்ட பலர்‌ நடித்திருந்தனர்‌. ஏ.ஆர்‌.ரகுமான்‌ இசையமைத்திருந்தார்‌.

    இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாபா திரைப்படம் மீண்டும்‌ மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு, நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர்‌ கிரேடிங்‌ செய்யப்பட்டு டிசம்பர் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....