Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்கல்லறை திருநாள் அனுசரிப்பு: மெழுகுவர்த்தி ஏற்றி மனம் உருகி பிரார்த்தனை..!

    கல்லறை திருநாள் அனுசரிப்பு: மெழுகுவர்த்தி ஏற்றி மனம் உருகி பிரார்த்தனை..!

    இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 02-ஆம் தேதி உலகம் முழுவது உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கல்லறைத்திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி இன்று தென்னிந்தியாவில் கிறிஸ்தவர்களால் கல்லறைத் திருநாள் நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்பட்டது வருகிறது.

    இறந்தோரை நினைவுகூரும் சிறப்புமிக்க இந்த நல்ல நாளில், தமிழகத்தில் உலகப் புகழ்பெற்ற புனித தளமாகக் கருதப்படும் ஆரோக்கிய அன்னை மேரி மாதா, வீற்றிருக்கும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கல்லறைத்திருநாளை முன்னிட்டு, இன்று அதிகாலையிலேயே பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலியுடன் கூடிய பிரார்த்தனைகள் நடைபெற்றது .

    இந்த சிறப்பு திருப்பலியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிராத்தனை செய்ததுடன்,திருப்பலி முடிந்த பிறகு வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்கள் மற்றும் தங்களுடைய உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூதாதையர்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தினருக்கு ஆசி வழங்க வேண்டிக் கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவை போற்றும் விதமாக வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள, நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லறைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது. இதில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்களும் ,சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் பங்கேற்றனர்.

    இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை: ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார்- அமைச்சர் செந்தில் பாலாஜி

    அதேபோல் கல்லறை திருநாளையொட்டி கோவையில், புகழ்வாய்ந்த முக்கிய கத்தோலிக்க மற்றும் சிஎஸ்ஐ தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் மேற்கொள்ளப்பட்டது.இதில் கிறிஸ்தவ மக்கள் அநேகர் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு முன்னோர்களின் கல்லறையை சீரமைத்து வர்ணம் பூசி,அவற்றை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டனர்.

    இதனையடுத்து, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், மணப்பாடு, உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காலை முதலே சிறப்பு திருப்பலியுடன் கூடிய பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக சென்னை கீழ்பாக்கம் பெரிய கல்லறைத்தோட்டத்தில் கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் வருகை தந்து தங்களது உறவினர்கள் மற்றும் முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, இனிப்புகள் வழங்கி பிரார்த்தனை செய்தனர் .இதில் பங்கு அருட்தந்தையர்களும் கலந்துகொண்டு அங்கு இருக்கும் கல்லறைகளை புனித நீர் தெளித்து மந்திரித்து, பிரார்த்தனைகள் செய்தனர்.

    கல்லறை தோட்டங்களுக்கு கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாக சென்று காலை முதல் மாலை வரை அஞ்சலி செலுத்துவர்.இதற்காக கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் ஊர்களில் தற்காலிக பூக்கடைகள் அமைக்கப்பட்டு பூ விற்பனைகளும் சூடுபிடித்துள்ளது.

    அதேபோல் மாலை வேலையிலும் பங்கு தந்தையர்கள் கல்லறை தோட்டங்களுக்கு சென்று புனித நீரால் மந்திரிப்பார்கள்.இதனையடுத்து ஆலயங்களில் அனைத்து ஆன்மாக்களின் இளைப்பாறுதலுக்காக திருப்பலியும் நடைபெறும்.

    இதையும் படிங்க: மழையில் ஒழுகிய ‘அல்ட்ரா டீலக்ஸ்’ ! கடுப்பான பயணி ? நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....