Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவடகிழக்கு பருவமழை: ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார்- அமைச்சர் செந்தில் பாலாஜி

    வடகிழக்கு பருவமழை: ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார்- அமைச்சர் செந்தில் பாலாஜி

    ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

    கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சியில் 846 வார்டுகளில் மக்கள் சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது என்றும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக திமுக ஆட்சியில் கோவை மாநகரில் 211 கோடி ரூபாய் செலவில் சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் அந்தப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

    மேலும், சிறப்பு நிதியாக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 26 கோடி ரூபாய் ஏலம் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

    தொடர்ந்து பேசிய அவர், பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்றும் மக்களின் குறைகளை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு இருப்பதாகவும் கூறினார். 

    வடகிழக்கு பருவமழை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி அநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்கநாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா? புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சகம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....