Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா? புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சகம்

    நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா? புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சகம்

    ஜிஎஸ்டி வசூல் 1.50 லட்சம் கோடியை கடந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

    தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கும் 2022-ம் ஆண்டில் அக்டோபர் மாதம் மட்டும்  ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,51,718 கோடி என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல்  ரூ.1.67,540 கோடி வசூலானது. 

    இந்நிலையில், ஏப்ரலுக்கு அடுத்தபடியாக அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல் அதிகமாகியுள்ளது. மேலும், தொடர்ந்து 8-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஜிஎஸ்டி வசூல் 1.50 லட்சம் கோடியை கடந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

    அக்டோபர் மாதம் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ. 1,51,718 கோடி, இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 26,039 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.33,396 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.81,778 கோடி (சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.37,297 கோடி உள்பட) செஸ் ரூ.10,505 கோடி (சரக்கு இறக்குமதி மூலம் வசூலான ரூ. 825 கோடி உள்ளடங்கியது) ஆகும்.

    தமிழகத்தில் நடப்பாண்டில் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல் 25% அதிகரித்து ரூ.9,540 கோடி ஆகவும், புதுச்சேரியில் ஜிஎஸ்டி வரி வசூல் 34% அதிகரித்து ரூ.204 கோடி ஆகவும் உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: நாணயம், காகிதத்திற்கு ‘குட்பாய்’ இந்தியாவில் இன்று டிஜிட்டல் கரன்சி அறிமுகம்-ரிசர்வ் வங்கி தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....