Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபருவமழை எதிரொலி; சென்னையில் சுரங்கப்பாதைகள் மூடல்..! போக்குவரத்து மாற்றம்..!

    பருவமழை எதிரொலி; சென்னையில் சுரங்கப்பாதைகள் மூடல்..! போக்குவரத்து மாற்றம்..!

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மாற்றங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த இரு நாட்களாக சென்னையில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

    இந்நிலையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவித்துள்ளது. அதன்படி, இரங்கராஜபுரம்‌ சுரங்கப்பாதை மற்றும் கணேசபுரம்‌ சுரங்கப்பாதை மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இரங்கராஜபுரம்‌ சுரங்கப்பாதை சேறும்‌ சகதியுமாக உள்ளதாலும், கணேசபுரம்‌ சுரங்கப்பாதை முழுவதும்‌ மழைநீர்‌ சேர்ந்துள்ளதாலும் வாகனங்கள்‌ செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து மாற்றம்; 

    இரங்கராஜபுரம்‌ சுரங்கப்பாதை வழியாக  செல்லக்கூடிய வாகனங்களை அதின்‌ உள்ளே அனுமதிக்கப்படாமல்‌, இரங்கராஜபுரம்‌ மேம்பாலம்‌ வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல, கணேசபுரம்‌ சுரங்கப்பாதை வழியாக உள்ளிருந்து வெளியில்‌ செல்லக்கூடிய வாகனங்கள்‌ புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர்‌ ரவுண்டானா மற்றும்‌ பேசின்‌ பாலம்‌ வழியாகவும்‌, வெளியிலிருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள்‌ பெரம்பூர்‌ நெடுஞ்சாலை முரசொலி மாறன்‌ பாலம்‌ வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தில்லியில் தொடரும் அவலம்.. 5 மிருகங்கள் ஒன்றாக சேர்ந்து 14 வயது சிறுமிக்கு அரங்கேற்றிய கொடூரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....