Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மீண்டும் 2 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை! உலக நாடுகளை விடாமல் வம்பிழுக்கும் வடகொரியா...

    மீண்டும் 2 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை! உலக நாடுகளை விடாமல் வம்பிழுக்கும் வடகொரியா…

    வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. 

    வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2022-ம் ஆண்டு செப்டம்பர் வரையில் மட்டுமே 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியுள்ளத்தாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இந்தச் சூழலில், வடகொரியா மேலும் இரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசி சோதனை நடத்தியதாக ஜப்பான் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கு வெளியே விழுந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இதையும் படிங்க: பூமிக்கடியில் பெருங்கடல் இருப்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள் -மேற்பரப்பில் உள்ள கடல்களை விட 3 மடங்கு பெரியதாம் ..!

    பாலிஸ்டிக் ஏவுகணை வீச்சானது, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தென்கொரியாவை விட்டு நேற்று வெளியேறிய சில மணி நேரங்களுக்குள் வடகொரியா 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது குறிப்பிடத்தக்கது.

    மேலும், வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....