Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகட்டு கட்டாக சிக்கிய கள்ள நோட்டுகள்; போட்டி போட்டு எடுத்த பொதுமக்கள்

    கட்டு கட்டாக சிக்கிய கள்ள நோட்டுகள்; போட்டி போட்டு எடுத்த பொதுமக்கள்

    சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்த கும்பல் ஒன்று கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    வேலூர் கொணவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இதன் அருகில் இன்று (அக்டோபர் 1) காலை ஜாரில் வந்த கும்பல் ஒன்று கட்டு காட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டி சென்றது. காற்றில் பறந்த ரூபாய் கட்டுகள், வேகமாக பறந்தன. 

    இதனைக் கண்ட வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்தனர். அதில் ஒருவர், இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். 

    இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், அங்கு சிதறிய நிலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர். அதனை, காவல்நிலையம் கொன்று சென்று எண்ணிய போது, 14.50 லட்சம் ரூபாய் இருந்தது. 

    இதையும் படிங்க: வடபழனி முருகன் கோயில் சக்தி கொலு; ஐந்தாம் நாள் கொண்டாட்டத்தில் உற்சாகமாக பங்கேற்ற பக்தர்கள்!

    இதனை சோதனை செய்த போது அது கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள் என தெரியவந்தது. கள்ள நோட்டுகளை கொட்டி சென்ற கும்பல் யார் என்பது குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில்  காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு, பள்ளிகொண்டா அருகே காரிலிருந்து லாரிக்கு பணத்தை மாற்றியபோது, காவல்துறையிடம் ரூ.14.70 கோடி சிக்கிய நிகழ்வு  பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 1) காலை தேசிய நெடுஞ்சாலையில் கள்ள நோட்டுகளை கொட்டி சென்ற சம்பவம் வேலூரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....