Saturday, March 16, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புதற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்க புதிய உத்தரவு -பள்ளிக்கல்வித்துறை அதிரடி

    தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்க புதிய உத்தரவு -பள்ளிக்கல்வித்துறை அதிரடி

    தமிழகத்தில் பள்ளிகளில் மாற்றுப் பணிகளில் பணியாற்றி வரும் 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது .

    சென்னை : தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை, தொகுப்பூதிய அடிப்படையில் ,பள்ளி மேலாண்மைக் குழு மூலம், தற்காலிகமாக நிரப்புவதற்கு பள்ளிக்கல்வித் துறை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது .அதன் அடிப்படையில் 20 சதவீதம் ஆசிரியர்கள் மட்டுமே இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இடங்கள் இன்னும் நிரப்படாத நிலையில் ,பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது .

    இதன் காரணமாக இன்று பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாற்றுப்பணிகளில் உள்ள அதாவது இல்லம் தேடிக் கல்வித் திட்ட கட்டகங்கள் , தயாரிப்பு பணி,மொழிபெயர்ப்பு பணி,மின் பாடப்பொருள் தயாரிப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ள 182 ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ,ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

    அதன்படி மேலும் பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் 7500, 10,000, 12 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் .அதுவும் தலைமை ஆசிரியர்களே நியமித்துக் கொள்ளலாம் என்றும் ,இந்த நியமனங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது .

    இதையும் படிங்க: நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது – அமைச்சர் ஐ.பெரியசாமி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....