Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்உங்கள் துறையில் முதல்வர் திட்டம் - காவலர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

    உங்கள் துறையில் முதல்வர் திட்டம் – காவலர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

    உங்கள் துறையில் முதல்வர் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் இன்று காவலர்களின் குறைகளை கேட்டறிந்து , அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் .

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் , தேர்தல் பிரச்சாரத்தின் போது மாவட்டங்கள் தோறும் பொது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து , அப்பிரச்சனைகள்தொடர்பான மனுக்களைப் பெற்று, அந்த மனுக்களின் மீது ,திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனற வாக்குறுதியை அளித்திருந்தார்.

    ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த அந்த வாக்குறுதியின் படி , அதற்க்கென தனி ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து ,பொதுமக்கள் கொடுக்கும் அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

    அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக சென்னை காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு இன்று சென்றார் .அங்கு வளாக முகப்பில் மகிழம் பூ மரக்கன்றை நட்டு வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் , அங்குள்ள காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார் .

    இதனை தொடர்ந்து “உங்கள் துறையில் முதல்வர்” திட்டத்தின் கீழ் காவலர்கள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டது .அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ,அதற்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் . இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    இதையும் படிங்க: திமுகவின்‌ அராஜகமும்‌ ஆளும்‌ கட்சி நடத்தும்‌ அத்துமீறலும்‌.. பாஜக அறவழி போராட்டம் அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....