Saturday, March 16, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புரூ.50,000 வரை மாத ஊதியம் தரும் அரசின் வேலை அறிவிப்பு.. மக்களே விண்ணப்பித்துவிட்டீர்களா?

    ரூ.50,000 வரை மாத ஊதியம் தரும் அரசின் வேலை அறிவிப்பு.. மக்களே விண்ணப்பித்துவிட்டீர்களா?

    திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

    தற்போது இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவற்றுள், இரவு காவலர் பணிக்கு ரூ.15,700 – 50,000 மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வயதுவரம்பாக 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு தகுதியாக தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

    இதையடுத்து, அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.15,700 – 62,000 மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 1.7.2022 தேதியின்படி 18 முதல் 32-க்குள் வயது இருக்க வேண்டும். இப்பணிக்கு தகுதியாக, எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    இதையும் படிங்க:நயன்தாராவுடன் திரைப்படம், அனிருத் உடன் பார்ட்டி.. விஜய் செய்த அந்த செயல் – ஷாருக்கானின் ஹாப்பி ட்விட்!

    தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.dindigul.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ண ப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

    தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் வேலை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாளாக 14.10.2022 நிர்ணயிக்கப்பட்டுள்ளது., 

    மேலும், இதுகுறித்த விவரங்களை அறிய www.dindigul.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....