Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நயன்தாராவுடன் திரைப்படம், அனிருத் உடன் பார்ட்டி.. விஜய் செய்த அந்த செயல் - ஷாருக்கானின் ஹாப்பி...

    நயன்தாராவுடன் திரைப்படம், அனிருத் உடன் பார்ட்டி.. விஜய் செய்த அந்த செயல் – ஷாருக்கானின் ஹாப்பி ட்விட்!

    நடிகர் ஷாருக்கான் பதிவிட்டுள்ள ட்விட் ஒன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

    ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜவான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படமானது அடுத்த வருடம் ஜூன் மாதம் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஷாருக்கான் இறுதியாக நடித்த திரைப்படமான ஸீரோ 2018ம் ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகு கடந்த நான்கு வருடங்களாக, அவரின் திரைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை. 

    ஷாருக்கான் நடித்த படங்கள் வரிசையாக படுதோல்வியினைச் சந்தித்திருந்த நிலையில், நல்ல கதைக்காக பல்வேறு இயக்குநர்களை அணுகியிருந்தார். 

    இந்நிலையில், அட்லீயின் இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாயின. இந்த திரைப்படத்திற்கு ‘டைகர்’ என்று முதலில் பெயர் சூட்டப்பட்டிருந்தது. கொரோனாவினால் படப்பிடிப்பு தாமதமான நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஜவான் படத்திற்கான டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டைட்டில் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

    இதையும் படிங்க:ஆஸ்கருக்கு விண்ணப்பித்துள்ள ஆர்ஆர்ஆர்….வெற்றி வாகை சூடுமா?

    மேலும், ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் கௌரவத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில், இயக்குநர் அட்லீ பிறந்தநாளின் போது ஷாருக்கானுடன் விஜய் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படம் ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் இருக்கிறாரா என்ற கேள்வியை மேலும் அதிகப்படுத்தியது. 

    இந்நிலையில், தற்போது நடிகர் ஷாருக்கான் பதிவிட்டுள்ள ட்விட் ஒன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவதோடு, ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் இருக்கிறாரோ என்ற எண்ணத்தை நிரூபனம் செய்வதாகவே உள்ளது. 

    அந்த ட்விட்டில் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளதாவது:

    கடந்த முப்பது நாட்களில் தலைவர் தங்களது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருகைத் தந்து அருள் புரிந்தார். நயனதாராவுடன் ஒரு திரைப்படம் பார்த்தேன், அனிருத் உடன் பார்ட்டி செய்தேன். மேலும், விஜய் சேதுபதியுடன் ஆழ்ந்த உரையாடல்களில் இருந்தேன், தளபதி விஜய் எனக்கு சுவைமிக்க விருந்தளித்தார். 

    இவ்வாறு, நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். 

    இதுமட்டுமல்லாது, அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியாவுக்கு விருந்தோம்பலுக்காக நன்றி தெரிவித்ததோடு, சிக்கன் 65 செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....