Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஆஸ்கருக்கு விண்ணப்பித்துள்ள ஆர்ஆர்ஆர்....வெற்றி வாகை சூடுமா?

    ஆஸ்கருக்கு விண்ணப்பித்துள்ள ஆர்ஆர்ஆர்….வெற்றி வாகை சூடுமா?

    ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பொதுப் பிரிவில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

    பாகுபலி திரைப்படத்துக்கு பிறகு, இந்திய அளவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படமானது உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

    இதைத்தொடர்ந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. அப்போது திரைப்படத்தைக் கண்ட அமெரிக்காவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள் ஆர்ஆர்ஆர் படத்துக்கு தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்தத் திரைப்படம் தற்போது ஆஸ்கர் விருதுக்கான பொதுப் பிரிவில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை ஆர்ஆர்ஆர் திரைப்படக்குழுவே தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: பரபரப்பான ஐஎஸ்எல் முதல் ஆட்டம்….கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி முழக்கம்

     சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, விஎஃப்எக்ஸ் என ஆஸ்கரின் அனைத்து வகை விருதுகளுக்கும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் போட்டியிடுகிறது.

    மேலும், ஆஸ்கருக்கு விண்ணப்பித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படக்குழுவினருக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    முன்னதாக, இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ‘டோபரா’ பட நிகழ்ச்சியில் பேசியபோது “ஹாலிவுட்டில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டால், அந்தப் படம் ஆஸ்கர் வெல்ல 99 சதவிகித வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....