Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதொல்காப்பிய பூங்காவில் இனி இதை செய்யலாம்.. வெளிவந்த அறிவிப்பு - மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

    தொல்காப்பிய பூங்காவில் இனி இதை செய்யலாம்.. வெளிவந்த அறிவிப்பு – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

    சென்னை தொல்காப்பிய பூங்காவில் தினசரி நடைப் பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை அடையார் பகுதியில் உள்ள தொல்காப்பிய பூங்கா மிகவும் புகழ்பெற்ற பூங்காவாகும். இயற்கை எழில் சூழ்ந்த தொல்காப்பிய பூங்காவில் பல்வேறு அம்சங்களுக்காக மாணவர்களும், பொதுமக்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்தப் பூங்காவில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்காக திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், வழிகாட்டி சுற்றுலாவுக்காக திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். ஞாயிற்றுக்கிழமை, அரசு பொது விடுமுறை நாள்களில் அனுமதியில்லை.

    இதையும் படிங்க: 125 உணவு வகைகள் சமைத்து விருந்து; வருங்கால மாப்பிள்ளையை வரவேற்க மாமியார் திகட்டாத அசத்தல்!

    இந்நிலையில், தற்போது திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் நடைப்பயிற்சிக்கென தினமும் காலை 6.30 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், ஒருமுறை நடைப்பயிற்சி மேற்கொள்ள நபருக்கு ரூ.20, பதிவின் அடிப்படையில் நபருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.500, 3 மாதங்களுக்கு ரூ.1,500, ஆறு மாதங்களுக்கு ரூ.2,500, ஓர் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....