Sunday, March 17, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்நமக்கு நாமே மெசேஜ் செய்யலாம் - புதிய அம்சத்தை கொண்டுவரும் வாட்சப்

    நமக்கு நாமே மெசேஜ் செய்யலாம் – புதிய அம்சத்தை கொண்டுவரும் வாட்சப்

    தமக்குத் தாமே மெசேஜ் செய்துக்கொள்ளும் வசதியை வாட்சப் அறிமுகப்படுத்தியுள்ளது. 

    உலகில் அதிகளவு அனைவராலும் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்றச் செயலி என்றால் அது வாட்சப் செயலியே. தற்போது, அனைத்து வயதினராலும் பயன்படுத்தப்படும் செயலியாகவும் வாட்சப் விளங்கி வருகிறது. அனைவரிடமும் வாட்சப் சென்று சேர்ந்ததன் முக்கியக் காரணம், பயன்படுத்த இது மிகவும் எளிதாக உள்ளதென்பதே. 

    மேலும், வாட்சப் நிறுவனம் அவ்வப்போது தங்களது பயனர்களை ‘அப்டேட்’ மூலம் கவர்ந்திழுத்த வண்ணம் இருக்கும். அந்த வகையில்தான் குரூப் சாட், இமோஜி, ஸ்டேட்டஸ், ஸ்டிக்கர் எனப் பல அம்சங்களை வாட்சப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 

    இந்நிலையில், அப்படியாகத்தான் வாட்சப் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, வாட்சப் பயனாளர்கள் தமக்குத் தாமே மெசேஜ் செய்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த அம்சமானது, தற்போது பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இவ்வசதி தற்போது பீட்டா வெர்ஷனில் மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    ‘மாற்றுத்திறனாளிகள் பாதையை பிறர் பயன்படுத்தக்கூடாது’ – மநீம வலியுறுத்தல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....