Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்பெரம்பலூரில் 9,621 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்- முதலமைச்சர் வழங்கினார்

    பெரம்பலூரில் 9,621 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்- முதலமைச்சர் வழங்கினார்

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்திற்கான ரூ.279.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.11.2022) அரியலுார் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பெரம்பலூர் மாவட்டத்திற்கான ரூ.221.80 கோடி செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.31.38 கோடி மதிப்பீட்டிலான 54 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.03 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை – கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தின் கீழ் 209 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் துறையூர் – பெரம்பலூர் சாலையில் 30 கி.மீ. நீளத்திற்கு கடின புருவங்களுடன் கூடிய இருவழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்து, நக்கசேலம் மற்றும் குரும்பலூர் நகரப் பகுதிகளுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை; பள்ளிக்கல்வித் துறை சார்பில் வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள், 1 ஆய்வுக்கூடம் மற்றும் 4 கழிப்பறைகள் கொண்ட கட்டடம், ஆலத்தூர் வட்டம், தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 82 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள், 1 ஆய்வுக்கூடம் மற்றும் 4 கழிப்பறைகள் கொண்ட கட்டடம், பெரம்பலூர் வட்டம், குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 84 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள் மற்றும் 2 கழிப்பறைகள் கொண்ட கட்டடம்;

    என மொத்தம் 221 கோடியே 80 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வேப்பந்தட்டை கிராமத்தில் 4 கோடியே 19 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டட கல்லூரி மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம் மற்றும் 4 கோடியே 19 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டட கல்லூரி மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம்;

    உயர்கல்வித் துறை சார்பில் பெரம்பலூர், அரசு கலை அறிவியல் கல்லுாரியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள முதுகலை விரிவாக்க மையம்;
    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 3 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டும் பணி, ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஒதியம், பெரியம்மாபாளையம், பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், கூத்துார், கண்ணப்பாடி, குரூர், மாவிலங்கை, தேனூர், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், அகரம், அயன்பேரையூர், தேவையூர், எறையூர், வி. களத்தூர், திருவாளந்துரை ஆகிய ஊராட்சிகளில் 9 கோடியே 85 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பைப்லைன் விஸ்தரிப்பு,

    என மொத்தம் 31 கோடியே 37 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 54 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 49 பயனாளிகளுக்கு 2 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 46 பயனாளிகளுக்கு 4 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 140 பயனாளிகளுக்கு 15 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 888 பயனாளிகளுக்கு 23 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 951 பயனாளிகளுக்கு 38 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், கூட்டுறவுத் துறை சார்பில் 460 பயனாளிகளுக்கு 1 கோடியே 17 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 9,621 பயனாளிகளுக்கு 26 கோடியே 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

    இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....